தஞ்சாவூர் மாவட்ட சுகாதார மிக அறிவிப்புகள் இப்படி மையத்தின் சார்பாக 2023 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்ப அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த அறிவிப்புகளின் படி மொத்தம் 46 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்திருக்கிறது. இதன்படி மருத்துவத் துறையின் பல்வேறு பிரிவுகளுக்கு ஆட்கள் நியமனம் செய்யப்பட இருக்கின்றனர். இந்த அறிவிப்பின்படி மாவட்ட தர ஆலோசகர் பணிக்கு 1 காலியிடமும் பல் அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்கு 3 காலியிடங்களும் பல் உதவியாளர் பணிக்கு 3
காலியிடங்களும் மருத்துவ அதிகாரி பணிக்கு 10 காலியிடங்களும் ஹெல்த் இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு 19 காலியிடங்களும் உதவியாளர் பணிக்கு 10 காலியிடங்களும் என மொத்தம் 46 பணிகளுக்கான விண்ணப்பங்கள் மாவட்ட மருத்துவ நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் தஞ்சாவூர் மாவட்ட மருத்துவ அலுவலகத்தில் நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டும். மேலும் மாவட்ட தர ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் சுகாதார மேலாண்மை பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பல் அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பல் மருத்துவ பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மருத்துவ அதிகாரி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஹெல்த் இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணபிப்பவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாவட்ட தர ஆலோசகர் பணிக்கு ஊதியமாக 40,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. பல் அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்கு 36,000 ரூபாயும் பல் உதவியாளர் பணிக்கு 13,800 ரூபாயும். மருத்துவ அதிகாரி பணிக்கு 60,000 ரூபாயும் ஹெல்த் இன்ஸ்பெக்டர் பணிக்கு 14,000 ரூபாயும் உதவியாளர் பணிக்கு 8,500 ரூபாயும் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தஞ்சாவூர் மாவட்ட மருத்துவர் நிர்வாகத்தின் இணையதள முகவரியை கிளிக் செய்து விவரங்களை தெரிந்து கொள்ளலாம் thanjavur.nic.in.