திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை அருகே ஆஞ்சநேயர் என்பவருக்கு 27 வயதில் சந்திரலேகா என்ற மகள் இருந்துள்ளார். இவருடைய குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது.
மகள் சந்திரலேகா மற்றும் மூன்று மாத பேரக் குழந்தையுடன் ஆஞ்சநேயர் இரு சக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவர்கள் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று எதிரில் வந்து வேகமாக மோதி உள்ளது.
இதில் சந்திரலேகா மற்றும் ஆஞ்சநேயர் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். அப்பொழுதும் கூட குழந்தையை கீழே விழாமல் சந்திரலேகா இழுத்து பிடித்து, எந்த காயமும் ஏற்படாமல் தூக்கி பிடித்து இருந்தார். எனவே, குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
காயமடைந்த சந்திரலேகா மற்றும் ஆஞ்சநேயர் இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சந்திரலேகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மூன்று மாத குழந்தையை உயிரை கொடுத்து காப்பாற்றிய தாயின் செயல் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், அந்த தாய் உயிரிழந்திருப்பதால் குழந்தை இனி தாயில்லாமல் எப்படி வளரும் என்பதே நினைத்து பார்க்கையில் வேதனையை வேறுபடுத்தி இருக்கிறது.