பாலிவுட் திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப், பா. ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்..
சார்பட்டா பரம்பரையின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கிய படம் நட்சத்திரம் நகர்கிறது.. இது ஒரு காதல் படம் என்று தகவல் வெளியானது முதலே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.. இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா, கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.. இப்படத்தின் ட்ரெய்லர் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்று இப்படம் திரையரங்குகளில் வெளியானது.. இப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களே கிடைத்த நிலையில், பிரபல பாலிவுட் இயக்குனர் இப்படத்தை பாராட்டி உள்ளார்..
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள அனுராக் காஷ்யப் “நேற்று இரவு, நட்சத்திரம் நகர்கிறது படத்தின் தணிக்கை செய்யப்படாத பதிப்பை பார்த்தேன்.. இது காதல் மற்றும் பாரபட்சம் மற்றும் வெறுப்பு ஆகியவற்றிற்கு மேலாக அது எப்படி வாழ வேண்டும் என்பதைப் பற்றிய படம். இது அவரது தனிப்பட்ட படைப்பு மற்றும் எனக்கு மிகவும் பிடித்த பா ரஞ்சித் படம் என்றால் அது இதுதான் .இப்படத்தில் நடித்துள்ள அனைத்து அற்புதமான நடிகர்கள் மற்றும் இசை, ஒளிப்பதிவாளர், எடிட்டர் மற்றும் முழு குழுவினருக்கும் சிறப்பு பாராட்டுகள்.. ” என்று குறிப்பிட்டுள்ளார்..
அனுராக் காஷ்யம் தமிழ் படத்தால் ஈர்க்கப்படுவது இது முதல் முறை அல்ல. இயக்குனர் சசிகுமாரின் தமிழ் திரைப்படமான சுப்ரமணியபுரத்தால் ஈர்க்கப்பட்டு, கேங்க்ஸ் ஆஃப் வாசிபூர் படத்தை இயக்கியதாக அனுராக் காஷ்யப் கூறியுள்ளார்..
சமீபத்தில், மும்பையில் நட்சத்திரங்கள் நகர்கிறது படத்தின் சிறப்பு காட்சிக்கு பா.ரஞ்சித் ஏற்பாடு செய்திருந்தார்.. இந்நிகழ்ச்சியில் இயக்குனர்கள் அனுராக் காஷ்யப், நீரஜ் கெய்வான் மற்றும் நந்திதா தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். அதில், அனுராக் காஷ்யப் பா ரஞ்சித்தை கட்டிப்பிடிப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது..