fbpx

அடக்கடவுளே…! இரவோடு இரவாக ரூ.2.7 லட்சம் மதிப்புள்ள தக்காளியை திருடி சென்ற மர்ம நபர்கள்…!

நாடு முழுவதும் தக்காளியின் விலை தொடர்ந்து உச்சத்தை அடைந்து வருகின்றது. இந்த டயல் கர்நாடக மாநிலத்தில் தக்காளி திருடிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

கர்நாடகாவின் பேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் இருந்து 2.7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தக்காளியை திருடர்கள் எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே போல தெலுங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு கடையில் 20 கிலோ தக்காளி திருடப்பட்டதாக போலீஸார் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

பெங்களூருவில் தக்காளி தற்போது கிலோ 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதுகுறித்து பேலூரில் உள்ள தக்காளி விவசாயி கண்ணீர் மல்க கூறுகையில், செவ்வாய்கிழமை இரவு திருடர்கள் தங்களது தோட்டத்தில் அறுவடைக்காக காத்திருந்த தக்காளிகளை திருடி சென்றுள்ளனர். சகோதரர் போலீசில் புகார் அளித்துள்ளனர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Vignesh

Next Post

உங்கள் வங்கி கணக்கை உடனே செக் பண்ணுங்க!... பிரதமரின் விபத்து காப்பீட்டு திட்டம்!

Fri Jul 7 , 2023
உங்களின் வங்கி கணக்கில் இருந்து 436 மற்றும் 20 ரூபாய் என மொத்தம் 456 ரூபாய் கழிக்கப்பட்டதா என உடனே சரி பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி நடந்து இருந்தால் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் பிரதமரின் விபத்து காப்பீட்டு திட்டம் PMSBY மற்றும் பிரதமரின் ஆயுள் காப்பீட்டு திட்டம் PMJJBY ஆகிய இன்சுரன்ஸ் திட்டங்களுக்காக பணத்தை கழிப்பதாக வங்கிகள் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி பிரதமரின் விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் இரண்டு […]

You May Like