அமெரிக்காவை கலக்கும் டாப்லெஸ் பணிப்பெண் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறார். இந்தப் பணிப்பெண் ஒரு நாளைக்கு இந்திய மதிப்பில் 1.8 லட்ச ரூபாய் சம்பாதிக்கிறார் என்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இதனைப் பற்றிய காணொளி ஒன்றிணையும் தனது டிக் டாக்கில் பதிவு செய்திருக்கிறார் அமெரிக்காவின் பிரபல சமூக ஊடகவியலாளர் ஷாமி. தற்போது உலகம் முழுவதிலும் உள்ள மக்களிடையே
அதிகமான வருவாயை ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்த எண்ணம் இளம் தலைமுறையினரிடம் வேகமாக பரவி வருகிறது. இதற்காக அவர்கள் தங்களுக்கென தனி சேனல்கள் மற்றும் சமூக வலைதளங்கள் என பலவற்றின் மூலமும் தங்களது வருமானத்தை அதிகரிக்க பல்வேறு வகையான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைப் போலவே அமெரிக்காவைச் சார்ந்த பெண் ஒருவர் வீடுகளை தூய்மை செய்யும் பணியை மேலாடையின்றி செய்து வருகிறார். இதற்காக அவர் மணிக்கு 300 டாலர்கள் என ஊதியமாக நிர்ணயித்துள்ளார். இதேபோல தினமும் நான்கு முதல் ஐந்து வீடுகளுக்கு சென்று தூய்மை பணிகளை செய்து வருவதன் மூலம் ஒரு நாளைக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 1.8 லட்ச ரூபாய் பணி பெண்ணாக இருந்தே சம்பாதிக்கிறார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்துள்ள இவர் 18 வயது நிரம்பியவர்கள் மற்றும் அதற்கு மேல் இருப்பவர்கள் தன்னை வீட்டு வேலைக்காக புக் செய்யலாம் எனவும் தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த பெண்மணி தனது ஊதியத்தில் 30 சதவீதத்தை தனது பாதுகாவலர்களுக்காக ஒதுக்கி இருக்கிறாராம். வீடுகளை தூய்மை செய்யும் பணியின் போது மனம் சஞ்சலப்படும் நபர்களால் ஏற்படும் ஆபத்துக்களை தவிர்ப்பதற்கு தான் இந்த பாடிகாட் ஏற்பாடு என தெரிவித்திருக்கிறார்.