நாள்தோறும் பல்வேறு நிறுவனங்கள் அந்தந்த நிறுவனங்களில், இருக்கும் காலி பணியிடங்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், இன்று யூபிஎஸ்சி நிறுவனமானது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில்,aeronautical officer, principal assistant, geophysicist scientists, scientists ‘B’ சீனியர், administrative officer Grade II பணியிடங்களுக்கான 56 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இதற்கு பதிவு செய்ய விருப்பம் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு 10-8-2023 நாளையே இறுதி நாள் என்று சொல்லப்படுகிறது. ஆகவே, உடனடியாக இந்த பணிக்கு விண்ணப்பம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு, 35 வயது முதல், 40 வயது வரையில் இருக்க வேண்டும். அதேபோல, விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகத்தில், இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருப்பது அவசியம்.
இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக, தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் இதற்கான அதிகாரப்பூர்வமான வலைதளத்தில், சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
https://www.upsc.gov.in/sites/default/files/Advt-No-14-2023-Engl-210723_0.pdf