fbpx

இருமல் மருந்து குடித்து 18 குழந்தைகள் உயிரிழப்பு…! அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை…!

கலப்பட மருந்துகளை தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகளின் மரணத்திற்கு இருமல் சிரப் வழிவகுத்ததாகக் கூறப்படும் மருந்து நிறுவனமான மரியன் பயோடெக் நிறுவனத்தின் மூன்று ஊழியர்கள், கலப்பட மருந்துகளை தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் மருந்துப் பரிசோதகரின் புகாரின் பேரில், அதன் இயக்குநர்கள் இருவர் உட்பட, மரியன் பயோடெக் நிறுவனத்தின் ஐந்து அதிகாரிகள் மீது வியாழக்கிழமை இரவு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இயக்குநர்கள் தலைமறைவாக உள்ளதாகவும், அவர்களைப் பிடிக்க தேடுதல் பணி நடைபெற்று வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். மத்திய மற்றும் உத்தரபிரதேச மருந்து அதிகாரிகள் மரியான் பயோடெக் தயாரிப்புகளின் மாதிரிகளை சரிபார்த்ததில், அவற்றில் 22 மருந்துகள் கலப்படம் மற்றும் போலியானது என புகார் அளித்த மருந்து ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

கடல் பகுதியில் சூறாவளி காற்று...! தென் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு...! வானிலை மையம் தகவல்...!

Sat Mar 4 , 2023
தென் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் வெப்பநிலை இயல்பை விட மூன்று முதல் நான்கு டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கும். நாளை தென் தமிழக […]

You May Like