சுங்கக்கட்டணம் உயர்வு தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் எ.வ. வேலு பதிலளித்து பேசினார்..
தமிழ்நாட்டில் தற்போது மொத்த 55 சுங்கச்சாவடிகள் உள்ளது.. இதில் 29 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.. ரூ.10 முதல் ரூ.60 வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.. காருக்கு ரூ.60லிருந்து ரூ.70ஆகவும், இலகுரக வாகனத்திற்கு ரூ.105லிருந்து, ரூ.115ஆகவும் உயர்ந்துள்ளது.. அதே போல் லாரி மற்றும் பேருந்துகளுக்கு ரூ.205-ல் இருந்து ரூ.240ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது..
இந்நிலையில் சுங்கக்கட்டணம் உயர்வு தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.. அமைச்சர் எ.வ. வேலு இந்த தீர்மானத்திற்கு பதிலளித்து பேசினார்.. அப்போது “ விதிகளின் படி தான் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய அரசு சொல்கிறது.. அதன்படி தமிழகத்தில் இன்று 36 சுங்கச்சாவடிகளிலும், செப்டம்பரில் 22 சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்ந்துள்ளது…
பராமரிப்புக்காக வசூலித்தாலும் 40%க்கு குறைவாகவே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.. சுங்கக்கட்டணம் தொடர்பாக மத்திய அரசுக்கு பல முறை கடிதம் எழுதி உள்ளோம்.. எவ்வளவு கி.மீ தூரம் பயணிக்கிறோமோ அதற்கேற்றார் போல் சுங்கக்கட்டணம் வசூலிக்க உள்ளதாக கட்கரி கூறியுள்ளார்.. 5 சுங்கச்சாவடிகளில் காலாவதியாகி செயல்பட்டதை அறிந்து மூட வலியுறுத்தி உள்ளோம்..” என்று தெரிவித்தார்..