fbpx

அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்த மூதாட்டி….! வீட்டிற்குள் சென்று பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி, அப்புறம் என்ன நடந்தது தெரியுமா….?

குடும்ப தகராறில், சொந்த கணவனையே கயிற்றால் கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்த மனைவியால், அதிர்ந்து போன மாமியார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி (45). எலெக்ட்ரிசியானான இவரது மனைவி ஜெயந்தி (36). இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில், ரங்கசாமியின் மகன் சந்தோஷ் வேலைக்கு சென்று விட்டார். அப்போது, கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இவர்களின் மகள் தீபிகா தன்னுடைய பாட்டி வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில் தான், நேற்று இரவு மறுபடியும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அந்த சமயத்தில், ஆத்திரம் கொண்ட ஜெயந்தி, கணவர் ரங்கசாமியின் கழுத்தை கயிற்றால், இறுக்கி, கொடூரமான முறையில் கொலை செய்திருக்கிறார். அதன் பிறகு, அவருடைய உடலை அறையில் வைத்து, அதன் மீது துணிகளை போட்டு மறைத்துள்ளார். பின்னர் எதுவும் தெரியாது. போல நடமாடிக் கொண்டிருந்தார் என சொல்லப்படுகிறது. அப்போது அங்கு வந்த ஜெயந்தியின் மகள் தீபிகா, அப்பா எங்கே என்று தாயை கேட்டுள்ளார். ஆனால், மகள் கேட்டதற்கு ஜெயந்தி சரியாக பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

உடனே இது தொடர்பாக தீபிகா தன்னுடைய பாட்டியிடம் தெரிவித்திருக்கிறார். அவர் பதற்றத்துடன் ஓடி வந்து, மகனை தேடியபோது, அறையில் ரங்கசாமியின் உடல் துணிகளால் மூடப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், அலறியபடியே வெளியே ஓடி வந்தார். அவர்களைப் பார்த்ததும் ஜெயந்தி அந்த பகுதியில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Post

பட்ட பகலில் நட்ட நடு ரோட்டில் காதலியை கொடூரமாக சுட்டு கொலை செய்த இளைஞர்…..! நடந்தது என்ன வெளியான பகீர் பின்னணி…..!

Sun Aug 27 , 2023
அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில், ரோஸ்வில்லே பகுதியில், வணிக வளாகம் ஒன்று இருக்கிறது. இந்த வணிக வளாகத்தில், வாகனங்களை நிறுத்துமிடத்தில் சிம்ரன்ஜித் சிங் என்ற சீக்கிய இளைஞர் ஒருவர் தன்னுடைய காதலியுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். இதில் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர், தன்னுடைய காதலியை தான் வைத்திருந்த துப்பாக்கியால், சுட்டு கொடூரமாக கொலை செய்தார். அதன் பிறகு அதே இடத்தில், அந்த துப்பாக்கியை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். […]

You May Like