fbpx

#திண்டுக்கல்: மக்காச்சோள கதிர் அறுக்கும் இயந்திரத்தில் சிக்கி பெண் பரிதாப பலி..!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள எஸ்.பாறைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. இந்த விவசாயி தனது தோட்டத்தில் நேற்று இயந்திரம் மூலம் மக்காச்சோளத்தினை தோகைகளை வெட்டிக் கொண்டிருந்தார். 

அப்போது எதிர்பாராதவிதமாக கருப்பையா மனைவியான காளியம்மாள் (60) என்பவரின் சேலை சோலை அறுக்கும் இயந்திரத்தில் சிக்கியது. இயந்திரத்தில் தலை சிக்கியதால், பலத்த காயமடைந்த காளியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுபற்றி காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல் அறிந்த செம்பட்டி போலீசார், பலியானவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுபற்றி காளியம்மாள் மகனான குமார் எனபவர் காவல்துறைக்கு அளித்த புகாரின் பேரில் செம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மக்காச்சோளத்தினை வெட்டும் இயந்திரத்தில் திடீரென மூதாட்டி சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Rupa

Next Post

எதிர்க்கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி..!

Sat Dec 31 , 2022
எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்படுவார் என்றும், அதன் பிறகு பாஜகவுக்கு சிக்கல் ஏற்படும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடந்த சில மாதங்களாக நடந்து வரும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் ஒருமித்த கருத்துக்கு வர முடியாமல் எதிர்க்கட்சிகள் தோல்வியடைந்தன. இந்த […]

You May Like