fbpx

மகளிர் தின ஸ்பெஷல்..!! நாளை உங்கள் வங்கிக் கணக்கிற்கு வரும் ரூ.1,000..!! வெளியான செம குட் நியூஸ்..!!

மகளிர் தினத்தை முன்னிட்டு நாளைய தினமே, பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என திமுக அறிவித்திருந்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தது. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தனர். பின்னர், ஒருவழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு பெண்களின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் 15ஆம் தேதி ரூ.1,000 செலுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தற்போது 1 கோடியே 14 லட்சம் பயனாளர்கள் பயனடைந்து வருகின்றனர். பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000-ஐ உறுதி செய்யும் இத்திட்டம் பெண்கள் முன்னேற்றத்திற்கு கைக்கொடுக்கிறது.

இந்நிலையில், அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால், தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகையை உயர்த்தி வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, மார்ச் 14ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இது திமுகவின் கடைசி முழு பட்ஜெட் என்பதால், உரிமைத்தொகை திட்டத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே புதிதாக விண்ணப்பித்துள்ள பெண்களுக்கு 3 மாதத்தில் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். எனவே, சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து, தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.1,000 உரிமைத்தொகையை ரூ.1,500 அல்லது ரூ.2,000 ஆக உயர்த்த திமுக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் தான், பெண்களுக்கு மாதந்தோறும் 15ஆம் தேதி உரிமைத்தொகை ரூ.1,000 வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இம்மாதத்திற்கான பணம், மார்ச் 8ஆம் தேதியான நாளையே வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. நாளை மகளிர் தினம் என்பதால், அன்றைய தினமே வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரைவு வைக்கப்படும் என கூறப்படுகிறது.

Read More : பெண்களே..!! உங்களுக்கு நாள் கணக்கில் மாதவிடாய் தள்ளிப்போகிறதா..? ஆரம்பத்திலேயே சரிசெய்ய சூப்பர் டிப்ஸ்..!!

English Summary

It has been reported that Rs. 1,000 will be credited to women’s bank accounts tomorrow on the occasion of Women’s Day.

Chella

Next Post

தமிழக மீனவர்கள் 14 பேரைக் கைது செய்து இலங்கை கடற்படை அராஜகம்...!

Fri Mar 7 , 2025
The Sri Lankan Navy arrested 14 Pamban fishermen who were fishing in the Gulf of Mannar area.

You May Like