fbpx

உலகத்தில் மிக உயரமான பெண் முதல் முதலில் விமானத்தில் பயணம் !!

மிக உயரமான பெண் என கின்னசில் சாதனை படைத்த பெண் முதன் முதலாக விமானத்தில் பயணம் செய்துள்ளார்.

உலகத்திலேயே மிக உயரமான பெண் 7 அடி உயரத்தில் உள்ளார். ருமேஸ்யா கெல்கி என்ற பெண் துருக்கியின் விமான நிலையத்தில் இருந்து 13 மணி நேரம் பயணம் செய்துள்ளார். 25 வயதே நிரம்பிய அந்த இளம் பெண் வீவர் சின்ட்ரோம் என்ற நோய் உள்ளது. அதிக வளர்ச்சியை ஏற்படுத்தும் இந்த அரிய மரபணு கோளாறால் அவர் வளர்ச்சியடைந்துள்ளார். இதனால் அவர் வீல் சேரை பயன்படுத்தி வருகின்றார்.

துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவிற்கு விமானத்தில் 13 மணி நேர பயணத்தை அவர் மேற்கொண்டார். இதற்காக ஆறு விமான இருக்கைகளை ஸ்ட்ரெச்சர் போல் மாற்றி அவருக்கு விமானத்தில் பிரத்யேக வசதிகள் செய்யப்பட்டது. இதற்காக கெல்கி விமான நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இது பற்றி சமூக வலைத்தலங்களில் அவர் எழுதியிருக்கின்றார். ’’ ஆரம்பத்தில் இருந்து எந்த குறையும் இல்லாமல் பயணிக்க முடிந்தது. நிச்சயமாக இரு எனது கடைசி பயணம் கிடையாது. இது எனக்கு முதல் விமான பயணம். எனது பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருக்கும் நன்றி’’ என குறிப்பிட்டிருந்தார்.

தொழில்நுட்ப மென்பொருள் துறையில் பணியாற்றும் கெல்கி, தனது தொழிலை விரிவுபடுத்துவதற்காகவும் கின்னஸ் சாதனைகளுக்கு ஒத்துழைக்கவும் குறைந்தது ஆறு மாதங்கள் அமெரிக்காவில் தங்க  உள்ளதாக தெரிவித்திருக்கின்றார்.

Next Post

நெற்பயிரை நவம்பர் 15-க்குள் காப்பீடு செய்ய வேண்டும்…

Sat Nov 5 , 2022
சம்பா போன்ற பருவக்காலத்தில் பயிரிடப்படும் நெற்பயிர்களுக்கு வரும் 15ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிர்களின் உற்பத்தியை பெருக்குவது மட்டுமின்றி இயற்கை சீற்றங்களின்போது பயிர் பாதிப்பு ஏற்பட்டால் தமிழக வேளாண் மக்கள் பாதுகாக்க தமிழக முதல்வர் தலைமையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பயிற்காப்பீட்டிற்கு ரூ.2,339 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வெள்ளம் புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் பயிர்கள் பாதிக்கப்பட்டால் விவசாயிகளின் நிதி சுமையை குறைக்கும் […]

You May Like