fbpx

WTC25!… உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான அட்டவணையை வெளியிட்டது ஐசிசி!

2023 – 25ம் ஆண்டு வரையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.

ஐசிசியின் 2வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி 5 நாட்களாக நடைபெற்று கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்து. இதில், இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற இறுதிப்போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வென்று கோப்பையை கைப்பற்றியது. அதுமட்டுமில்லாமல், ஐசிசியின் அனைத்து விதமான கோப்பைகளை வென்ற முதல் அணி என்ற சாதனையும் படைத்தது ஆஸ்திரேலியா. இந்த நிலையில், 2023 – 25 ஆண்டு வரையிலான மூன்றாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது ஐசிசி. இதில், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 9 அணிகள் பங்கேற்கின்றன.

2023 – 25 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான அட்டவணையில் ஒவ்வொரு அணியும் உள்நாட்டில் 3 தொடர், வெளிநாட்டில் 3 தொடர் என்ற அடிப்படையில் 6 டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன. மொத்தம் 27 தொடர்களில் 68 டெஸ்டுகள் இதில் அடங்கும். மேலும், முந்தைய சீசன் போலவே இந்த சீசனிலும் வெற்றிக்கு 12 புள்ளியும், ‘டிரா’வுக்கு 4 புள்ளியும் வழங்கப்படும். அனைத்து போட்டிகள் முடிவில், WTC தரவரிசையில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் லார்ட்ஸில் நடக்கும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இறுதிப்போட்டி 2025-ம் ஆண்டில் லண்டன் லார்ட்சில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது. இதில் இருந்து 3-வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆரம்பிக்கிறது.

Kokila

Next Post

வாட்ஸ் அப்பில் இனி வீடியோ மெசேஜ்!... விரைவில் புதிய அப்டேட்!... அம்சங்கள் என்னென்ன?

Fri Jun 16 , 2023
வாட்ஸ் அப் செயலியில் வீடியோ மெசேஜ் அனுப்பும் அம்சத்தை விரைவில் கொண்டுவரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல மில்லியன் பயனர்கள் பயன்படுத்தும் செய்தி தளமான மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப், அவ்வப்போது தங்களது செயலியில் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி பயனர்களை குஷிப்படுத்துவது வழக்கம். இப்போது வரை, மக்கள் ஒரு மெசேஜ்-ஐ டைப் செய்து அல்லது ஆடியோ மெசேஜ்களை அனுப்ப முடியும். இப்போது, வீடியோ மெசேஜ்-ஐ பரிமாறிக்கொள்ள அனுமதிக்கும் புதிய அம்சத்தை […]

You May Like