தன்னுடைய காம இச்சையை தீர்த்துக் கொள்வதற்காக, மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்று கூட பார்க்காமல், பொள்ளாச்சி அருகே, ஒரு நபர் கொடூரமாக கற்பழித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவர், கடந்த சில வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், தன்னுடைய தந்தையுடன் வசித்து வந்தார். இந்த சூழ்நிலையில் தான், நேற்று முன்தினம் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை பார்த்த அவருடைய தந்தை, அந்தப் பெண்ணிடம் இது பற்றி விசாரித்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான ஆனந்தகுமார்(31) என்பவர், அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் என்ற விவரம் தெரிய வந்தது.
இதைக் கேட்டு, அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் தந்தை, உடனடியாக, வழங்கிய புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர், ஆனந்தகுமார் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.