அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில், ரோஸ்வில்லே பகுதியில், வணிக வளாகம் ஒன்று இருக்கிறது. இந்த வணிக வளாகத்தில், வாகனங்களை நிறுத்துமிடத்தில் சிம்ரன்ஜித் சிங் என்ற சீக்கிய இளைஞர் ஒருவர் தன்னுடைய காதலியுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். இதில் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர், தன்னுடைய காதலியை தான் வைத்திருந்த துப்பாக்கியால், சுட்டு கொடூரமாக கொலை செய்தார். அதன் பிறகு அதே இடத்தில், அந்த துப்பாக்கியை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த இளைஞர், அந்த ஷாப்பிங் வளாகத்தில், ஷாப்பிங் செய்து, பணம் கொடுத்து, ஒரு சட்டையை வாங்கி இருக்கிறார். பிறகு அந்த புதிய சட்டையை அணிந்து கொண்டு பழைய சட்டையை தன்னுடைய பையில் மறைத்து வைத்துக் கொண்டார். அதன் பிறகு துப்பாக்கி சூடு நடந்தது என்பது தெரிய வந்ததால், அந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு நடைமுறை ப்படுத்தப்பட்டது. காவல்துறையினர் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர்.
ஆனால், அந்த இளைஞர் வணிக வளாகத்தில் இருந்து, வெளியே செல்ல வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் கடைசியாக தாக்குதலில் ஈடுபட்ட நபர் சென்ற திசை போன்ற பல்வேறு விவரங்கள் உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து, காவல்துறையினர், அந்த இளைஞரை மிக தீவிரமாக தேடி வந்தனர். இதன் பிறகு கண்காணிப்பு கேமரா காட்சிகளின் உதவியோடு, சிம்ரன்ஜித் சிங் கைது செய்யப்பட்டார். அதோடு, இது பற்றி, தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.