fbpx

ப்ளீஸ் உன் கிட்ட தனியா பேசணும்….! காதலனை நம்பி சென்ற இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி அப்புறம் என்ன நடந்தது தெரியுமா…?

காதலனை பார்ப்பதற்காக சென்ற இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து வைத்து, மிரட்டிய காதலனை, போலீசில் வசமாக சிக்க வைத்த இளம் பெண்.

அதாவது, மகாராஷ்டிரா மாநிலம் நலசோபரா பகுதியைச் சேர்ந்த ரெகான் சர்தார் (24) என்பவர் அஜ்சத் அஜ்சத் டாபரே என்ற கட்டிட ஒப்பந்ததாரரிடம் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இதற்கு நடுவே, அந்த இளைஞருக்கு 20 வயது இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. மேலும், தனக்கு திருமணம் ஆனதை மறைத்து, அந்த இளம் பெண்ணுடன் அவர் பழகி வந்துள்ளார்.

இந்த நிலையில் தான், சென்ற 13ஆம் தேதி அந்த இளம் பெண்ணும், சர்தாரும் ராஜோடி கடற்கரைக்கு சென்றனர். அப்போது இருவரும் புகைப்படம் எடுப்பதற்காக, சர்தாரின் கைப்பேசியை வாங்கி பார்த்த போது தான், அந்த இளம் பெண்ணுக்கு, சர்தார் ஏற்கனவே திருமணமானவர் என்ற விவரம் தெரியவந்தது.

ஆகவே, இதை தெரிந்து கொண்ட இளம் பெண் அதிர்ச்சியில் உறைந்து, சர்தார் உடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவருடனான உறவை துண்டித்துக் கொள்வதாக கூறிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டார். ஆனாலும், அந்த இளம் பெண்ணை மீண்டும் சந்திக்க வேண்டும் என்று, சர்தார், தொடர்ந்து, தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

ஆனால், சர்தாரின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள அந்த இளம் பெண் மறுத்ததால், இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை, சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று, அந்த இளம் பெண்ணை சர்தார் மிரட்டி இருக்கிறார். இதன் காரணமாக, பயந்து போன அந்த இளம்பெண், சர்தாரை கடந்த 15 ஆம் தேதி நலசோபராவில் இருக்கின்ற ஒரு லாட்ஜில் சந்தித்துள்ளார்.

சர்தாரை சந்தித்தபோது, அங்கே இருந்த தண்ணீரை எடுத்து குடித்தவுடன், அந்த இளம் பெண்ணுக்கு கடுமையான தூக்கம் வந்து இருக்கிறது. இதனால், மயங்கி சரிந்த அந்த இளம் பெண்ணை, சர்தார் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அதனை வீடியோவாகவும் பதிவு செய்தார். அதன் பிறகு வெகு நேரம் கழித்து, கண் விழித்து பார்த்த போது தான், தனக்கு என்ன கொடுமை நடந்து இருக்கிறது? என்பது அந்த பெண்ணுக்கு தெரிய வந்தது.

அதன் பிறகு, இந்த விவகாரத்தை வைத்துக்கொண்டு, அந்த இளம் பெண்ணை சர்தார் மிரட்டி இருக்கிறார். அதாவது, தன்னுடைய கட்டிட தொழில் செய்யும் முதலாளியுடன் ஒரு இரவு தங்கி இருந்தால் மட்டும்தான், ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை அழிப்பேன் என்று மிரட்டி இருக்கிறார்.

இதனால் அதிர்ந்து போன அந்த இளம் பெண், வீட்டிற்கு வந்து சோர்வுடனேயே இருந்து வந்துள்ளார். இதை கண்ட அவருடைய தாய், அவரிடம் இது பற்றி விசாரித்த போது, தனக்கு நேர்ந்த கொடுமைகள் அனைத்தையும் தாயிடம் கூறி அழுதுள்ளார். இதனை தொடர்ந்து, உடனடியாக காவல்துறையிடம் அந்த இளம் பெண்ணின் தாயார் புகார் வழங்கினார்.

அந்த புகாரின் அடிப்படையில், சர்தாரை கைது செய்த காவல்துறை, அவரை தனியார் வாகனத்தில் அழைத்துச் சென்றது. ஆகவே, குற்றம் சுமத்தப்பட்டவருக்கு ஆதரவாக காவல் துறை செயல்பட்டு வருவதாக அங்குள்ள ஒரு சமூக ஆர்வலர் குற்றம் சுமத்தினார். ஆனாலும், வாகன பற்றாக்குறை காரணமாகத்தான் தனியார் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார் சர்தார் என்று காவல்துறையினர் விளக்கம் அளித்திருக்கிறார்கள்.

Next Post

நீங்கள் இன்னும் இதை செய்யவில்லையா..? இனி உங்களுக்கு சம்பளம் கிடைக்காது..!! உடனே செக் பண்ணுங்க..!!

Tue Aug 29 , 2023
இந்தியாவில் ஆதார் எண் மற்றும் பான் எண் முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நிதிப் பரிவர்த்தனைகளுக்கு பான் எண்ணை கொண்டே அனைத்து பரிவர்த்தனைகளையும் செய்ய மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. அதற்காக பான் மற்றும் ஆதாரை இணைக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கணிசமான எண்ணிக்கையிலான நபர்கள் இந்த இணைப்பை முடித்திருந்தாலும், காலக்கெடுவைத் தவறவிட்டவர்கள் இன்னும் இருக்கின்றனர்.  இதனால் அவர்கள் பின்விளைவுகளை இனி சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகிறது. அதாவது, மாத […]

You May Like