”அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டாம்..” அமைச்சர் நிர்மல் குமார் சர்ச்சை.. உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்..!

nirmal kumar temple

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சாமி கோவிலில் தமிழக அமைச்சர் நிர்மல் குமார் கடந்த 15-ம் தேதி சாமி தரிசனம் செய்தார்.. வழக்கமாக மதியம் 12.45 மணீக்கு சாத்தப்படு கோயில் அன்றைய தினம் அமைச்சருக்காக திறந்து வைக்கப்பட்டிருந்தது.. அமைச்சரின் தரிசனத்துக்கு பிறகே கோவில் நடை அடைக்கப்பட்டது.. மேலும் கருவறையில் அமைச்சர் தரிசனம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது..


இந்த சூழலில் கடந்த 21-ம் தேதி, சென்னை உயர்நீதிமன்ற கிளையில் கோயில்களில் சிறப்பு கட்டண தரிசன முறையை எதிர்த்த வழக்கு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமிநாராயணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, திருப்பரங்குன்றம் கோயிலில் அமைச்சர் சென்றபோது என்ன நடந்தது என்பது குறித்து, இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் உரிய விளக்கமளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்..

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.. அப்போது அறநிலையத்துறை தரப்பு “ கோயில் நடை அடைக்கும் முன்பு அமைச்சர் கோயிலில் நுழைந்ததற்கான சிசிடிவி ஆதாரம் உள்ளது.. அமைச்சரால் மற்ற பக்தர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை.” என்று விளக்கம் அளித்தது..

அப்போது நீதிபதிகள் “ அமைச்சர் தரிசனம் செய்த விவகாரத்தில் யாரையும் தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்க விரும்பவில்லை.. எம்.எல்.ஏ, அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டாம்..” என்று அறிவுறுத்தினர்..

Read More : திருச்செந்தூர் விவகாரம்.. 2 பேர் டிஸ்மிஸ்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு..!

RUPA

Next Post

அதிவேக வைஃபை வெறும் 15 நிமிடங்களில் கிடைக்கும்..! மத்திய அரசு சொன்ன குட்நியூஸ்..!

Fri May 29 , 2026
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், இணையம் இல்லாத வாழ்க்கை என்பது சாத்தியமற்றதாகவே தோன்றுகிறது. தற்போது, ​​பொது வைஃபை (Wi-Fi) சேவையை மேலும் எளிதாக்கும் வகையில் அரசாங்கம் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது; இது இணையப் பயன்பாட்டில் ஒரு புதிய புரட்சியைத் தொடங்கி வைத்துள்ளது. பொது வைஃபை சேவையைச் சாமானிய மக்களிடம் இன்னும் நெருக்கமாகக் கொண்டு சேர்க்கும் வகையில், தொலைத்தொடர்புத் துறை ஒரு பிரம்மாண்டமான திட்டத்தை வகுத்துள்ளது. ‘டிஜிட்டல் இந்தியா’ கனவை […]
Government Launches Wi Fi Plans

You May Like