உத்தரப் பிரதேசத்தில் ஒரு விரைவு நீதிமன்ற நீதிபதி, கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 22 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்திருப்பது கவனம் பெற்றுள்ளது. பல்வேறு கொலை வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பளித்து வரும் முஷாபர்நகர் விரைவு நீதிமன்ற நீதிபதி ரவிகுமார் திவாகரின் இந்த நடவடிக்கை தற்போது பேசுபொருளாகியுள்ளது. 46 வயதான ரவிகுமார் திவாகர், உத்தரப் பிரதேசத்தின் முஷாபர்நகர் விரைவு நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கெனவே பல முக்கிய […]

Mac கணினிகளை பயன்படுத்தி வருபவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் முக்கியமான பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. Mac-ன் Screen Sharing வசதியில் கண்டறியப்பட்ட பாதுகாப்பு குறைபாட்டை பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள் சில சாதனங்களில் அத்துமீறி நுழைந்து தீங்கிழைக்கும் மென்பொருட்களை நிறுவியிருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனால், Mac பயனர்கள் தங்கள் சாதனங்களை உடனடியாக அப்டேட் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பிரச்சினை, Mac-ல் மற்றொரு சாதனத்திலிருந்து கணினியின் திரையை அணுக […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்கத் தேர்தல் முறையில் மாற்றங்களைக் கொண்டுவரும் ‘சேவ் அமெரிக்கா’ (SAVE America Act) சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இதற்காக, இந்தியாவின் தேர்தல் புகைப்பட அடையாள அட்டை நடைமுறையை அவர் பாராட்டிப் பேசியுள்ளார். இது தொடர்பாக தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், இந்த மாதத் தொடக்கத்தில், இந்தியாவின் […]

பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அசோக் தாம் சிவன் கோயிலில் சாவன் மாதத்தின் சிறப்பு வழிபாட்டையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். கோயில் அருகே உள்ள அசோக் தாம் ஹால்ட் ரயில் நிலையம் பகுதியில் திடீரென ஏற்பட்ட பதற்றம் கூட்ட நெரிசலாக மாறியதில் 7 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் காயமடைந்துள்ளனர். திங்கள்கிழமை அதிகாலை சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய ஏராளமான பக்தர்கள் கோயிலை நோக்கி வந்துள்ளனர். […]

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் 43 வயது நபர் ஒருவர் தனது பெற்றோரையே இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மது அருந்துவதற்காக பணம் கேட்டு ஏற்பட்ட தகராறே இந்த கொடூர சம்பவத்துக்கு காரணமாக இருந்ததாக போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. நெடுங்கண்டம் அருகே ஏழுக்கம் வயல் பகுதியில் சந்திரன் (55), அவரது மனைவி வல்சம்மா (50) ஆகியோர் வசித்து வந்தனர். விவசாயப் பணியில் ஈடுபட்டு வந்த […]

தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் வரும் அக்டோபர் 2ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டு லைகா தயாரிப்பில் முதல்வர் விஜய்யின் மகனான ஜேசன் படம் இயக்குகிறார் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. படப்பிடிப்பும் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவடைந்தது. படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பும் பெற்றது. […]

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திருமணமான பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக உருவான பிரச்சினை கொலையில் முடிந்துள்ளது. தோட்டத்தில் தங்கியிருந்த கூலித் தொழிலாளி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அந்தப் பெண்ணின் உறவினரான 19 வயது இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு தோட்டத்தில் ராமச்சந்திரன் (45) என்பவர் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஏற்கெனவே நெல்லை மாவட்டம் களக்காட்டில் உள்ள […]

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வதற்கு சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. […]

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பத்தாண்டுகளாக நடைபெற்று வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நீதிமன்ற நண்பரும் மூத்த வழக்கறிஞருமான விஜய் ஹன்சாரியா அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். வழக்கறிஞர் சினேகா கலிதா மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த 96 பக்க அறிக்கையில், நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் மீதான குற்ற வழக்குகள் குறித்த பல புள்ளிவிவரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் […]

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த அந்த 13 வயது சிறுமி, கடந்த ஓராண்டுக்கு முன்பு தனது தோழிகளுடன் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பூங்காவிற்கு சென்றபோது, அங்கிருந்த சில நபர்கள் அச்சிறுமிக்கு திட்டமிட்டு மது கொடுத்துப் பழக்கியுள்ளனர். கடந்த ஓராண்டுக்கும் மேலாக அச்சிறுமியைப் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பலமுறை கூட்டுப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில், மாணவியின் நடத்தையிலும், உடல்நிலையிலும் ஏற்பட்ட தீவிர மாற்றங்களை கவனித்த […]