சென்னை சேத்துப்பட்டு ரயில்நிலையம் அருகே உள்ள பணிமனடையில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இன்று மாலை 4 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.. தடம் புரண்ட ரயில் பெட்டிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பயணிகள் விரைவு ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் எந்த பாதிப்பும் இல்லை. பெட்டிகளை இணைப்பதற்காக சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டதால் பெரிய பாதிப்பு இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. மேலும் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
ஆந்திர மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் உள்ள ஓஎன்ஜிசி குழாயில் இருந்து பெரும் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது.. மாலிகிபுரம் மண்டலத்தில் உள்ள இருசமந்தா அருகே ஏற்பட்ட இந்த பெரும் எரிவாயு கசிவு காரணமாக, அருகிலுள்ள கிராமம் முழுவதையும் புகையால் சூழ்ந்துள்ளது. இந்த எரிவாயு கசிவின் மூலம் தீ விபத்து ஏற்பட்டதால் இருசுமண்டா பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.. கிராம மக்கள் இந்தச் சம்பவம் குறித்து ஓஎன்ஜிசி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். குழாயில் […]
டாஸ்மாக் பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது.. அதன்படி, 10 ரூபாய் கூடுதலாக கொடுத்த மதுபான பாட்டில் வாங்கிவிட்டு காலி பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் திரும்ப ஒப்படைக்கும் போது 10 ரூபாயை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்ற திட்டம் மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.. மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் காலி மது பாட்டிலகளை […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
இந்திய அரசு வாட்ஸ்அப் மூலம் மக்களுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்கத் தொடங்கியுள்ளது. சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளது. மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப்பில் உள்ள இந்த சாட்போட் மூலம் தனிநபர்கள் எவ்வாறு இலவச சட்ட உதவியைப் பெற முடியும் என்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவில் சட்டம், குற்றவியல் சட்டம், பாதுகாப்பு, பெருநிறுவன மற்றும் குடும்பப் பிரச்சனைகள் போன்ற பல்வேறு துறைகளில் சட்ட உதவி […]
பெங்களூரில் உள்ள ஒரு திரையரங்கின் பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மடிவாளா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தியா திரையரங்கில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரீ ரிலீஸ் செய்யப்பட்ட ‘நுவ்வு நாக்கு நச்சாவ்’ என்ற தெலுங்குப் படம் திரையிடப்பட்டபோது, திரைப்படம் பார்க்க வந்தவர்கள் கழிவறையைப் பயன்படுத்தச் சென்றபோது இந்தக் கேமரா கண்டுபிடிக்கப்பட்டது. இதைக் கண்டறிந்ததும், உள்ளூர் மக்கள் உடனடியாக கேமராவை வைத்ததாக சந்தேகிக்கப்பட்ட […]
இந்த காலக்கட்டத்தில், பலரும் தகவல்களைக் கண்டறிய அல்லது வேலைகளை எளிதாக முடிக்க செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். சிறிய சந்தேகங்களைத் தீர்க்கவும் அல்லது எந்தவொரு வேலையையும் எளிதாக்கவும் AI சாட்போட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது சாட் ஜிபிடி, கூகிள் ஜெமினி மற்றும் க்ரோக் போன்ற AI தளங்களுக்கு அதிக தேவையை ஏற்படுத்தியுள்ளது. புதிய கருவிகளும் வந்துகொண்டிருக்கின்றன. தற்போதுள்ள AI தளங்களும் மேம்படுத்தப்பட்ட பதிப்புகளை வெளியிட்டு, பயனர்களை அதிகரிக்கப் போட்டியிடுகின்றன. […]
விஜய்யின் அடுத்த படமான ‘ஜன நாயகன்’, 2023-ல் வெளியான வெற்றிப் படமான ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது. அதில் நந்தமுரி பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடித்திருந்தார். விஜய்யின் திரைப்பயணத்தைப் பார்த்தால், தனது 34 ஆண்டுகால கதாநாயகன் வாழ்க்கையில் அவர் 16 ரீமேக் படங்களில் நடித்துள்ளார். காதலுக்கு மரியாதை : 1997-ல் வெளியான காதலுக்கு மரியாதை படம், குஞ்சாக்கோ போபன் கதாநாயகனாக நடித்த மலையாள காதல் நாடகப் படமான ‘அனியத்திப்ராவ்’ […]
இரவில் தோன்றும் நீரிழிவு அறிகுறிகள் மிகவும் முக்கியமானவை. அவற்றை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள். இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக தாகம், கால் வலி, தசைப்பிடிப்பு மற்றும் எரிச்சல் போன்ற அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தால்… உடனடியாக மருத்துவரை அணுகவும். சில சமயங்களில், நீரிழிவு நோய் வியர்வை மற்றும் பயங்கர கனவுகளையும் கூட ஏற்படுத்தலாம். விரிவாகப் பார்த்தால்… நீரிழிவு நோய் என்பது இப்போது பலரை வாட்டி வதைக்கும் ஒரு பிரச்சனையாகும். இது ஒரு […]
இந்தியாவில் ரயில் பயணம் என்றாலே நீண்ட தூரப் பயணம், டிக்கெட் விலை மற்றும் முன்பதிவு செய்வதில் உள்ள சிரமங்கள் என்றுதான் நினைப்போம். ஆனால், இதற்கெல்லாம் மாறாக, நம் நாட்டில் ஒரு அரிய ரயில் உள்ளது. இந்த ரயிலில் பயணிக்க நீங்கள் ஒரு பைசா கூட செலவழிக்கத் தேவையில்லை. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த இலவச சேவை சமீபத்தில் தொடங்கப்பட்டது அல்ல, மாறாக சுமார் 75 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக இயங்கி வருகிறது. […]

