தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், வட கடலோர தமிழகப் பகுதிகள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அணிந்துள்ள தலைப்பாகைகள் ஒவ்வொரு ஆண்டும் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் மாநிலங்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளன. ராஜஸ்தானி பாந்தனி, லெஹரியா ஸ்டைல்கள் மற்றும் மூவர்ண வடிவங்கள் என 2014 முதல் 2026 வரை அவர் அணிந்த தலைப்பாகைகளின் சிறப்பம்சங்களின் தொகுப்பு இதோ. 2026-ஆம் ஆண்டு தனது 13-வது தொடர் சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மோடி, மஞ்சள் மற்றும் வெள்ளை நிற […]
சென்னையில் கழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முதல்வர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் வர்த்தினி என்பவர் தமிழக டி.ஜி.பி.க்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தப் புகாரில், ஊடகங்கள் மற்றும் பொதுவெளியில் நயினார் நாகேந்திரன் பேசிய கருத்துகள் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், மனவேதனை அளிக்கும் வகையிலும் அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். […]
அருணாச்சலப் பிரதேசத்தில் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி, 5 ராணுவ வீரர்கள் உள்பட பலர் மாயமாகியுள்ளனர்; இந்த பேரிடரில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். மோசமான வானிலை மற்றும் கடுமையான நீர் தேக்கத்தையும் பொருட்படுத்தாமல், அண்டை முாம்களில் இருந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் அனைத்து வளங்களும் பயன்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் […]
சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தமிழக முதல்வர் விஜய்யின் நிகழ்ச்சியில் நடிகை த்ரிஷா கலந்துகொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. வீடியோவில், த்ரிஷா நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபா சந்திரசேகர் ஆகியோருக்கு அருகில் அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது. இந்த விழாவிற்காக த்ரிஷா மஞ்சள் நிற […]
சட்டப்பேரவையில் மக்கள் பிரதிநிதிகளின் களப்பணி மற்றும் பயண சிரமங்களைச் சுட்டிக்காட்டி வி.சி.க. சட்டமன்ற உறுப்பினர் முன்வைத்த கோரிக்கையை தொடர்ந்து, எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் கார் மற்றும் உதவியாளர் வழங்கும் திட்டத்தை அரசு பரிசீலித்து வருவதாக தலைமைச் செயலக வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காட்டுமன்னார்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணி பேசுகையில், தமக்கு சொந்தமாக வாகனம் இல்லாததால் 280 கி.மீ தொலைவிலிருந்து வாடகை வாகனங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்தைப் […]
நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.இந்தியாவின் 80-வது சுதந்திர தினம் வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கியது. இதனையடுத்து சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, நாடாளுமன்றத்திலும் […]
நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் மக்கள் அனைவருக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெள்யிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “தாய்நாட்டின் விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே ஈந்த எண்ணற்ற தியாகிகளையும், ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக அஞ்சாது களமிறங்கிப் போராடிய தேசத் தலைவர்களையும் இந்நன்னாளில் நன்றியுடன் நினைவுகூர்ந்து, மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய சுதந்திரப் போராட்ட […]
ஒரே பிரிட்டிஷ் ஆட்சியின் பிடியில் இருந்து விடுதலை பெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அண்டை நாடுகளும், தங்களின் சுதந்திர தினத்தை வெவ்வேறு தேதிகளில் கொண்டாடி வருகின்றன. பாகிஸ்தான் ஆகஸ்ட் 14-ஆம் தேதியும், இந்தியா ஆகஸ்ட் 15-ஆம் தேதியும் சுதந்திர தினத்தை அனுசரிப்பதற்கு பின்னால் பிரிட்டிஷ் சட்டம், வைஸ்ராய் மவுண்ட்பேட்டனின் பயணத் திட்டம் மற்றும் வரலாற்று நிகழ்வுகள் முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன. உண்மையில், 1947-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் […]
புதிய கார் வாங்கும்போதோ அல்லது இருக்கும் காரை மெருகேற்ற விரும்பும்போதோ, அலாய் வீல்களை (Alloy Wheels) தேர்ந்தெடுப்பதா அல்லது வழக்கமான ஸ்டீல் வீல்களையே (Steel Wheels) பயன்படுத்துவதா என்ற குழப்பம் வாகன ஓட்டிகள் மத்தியில் எழுவது இயல்பு. பொதுவாக கார் தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிப்பு செலவை குறைக்கும் நோக்கில் அடிப்படை மாடல்களில் ஸ்டீல் வீல்களையும், உயர் ரக மாடல்களில் கூடுதல் வடிவமைப்பு மற்றும் செயல்திறனுக்காக அலாய் வீல்களையும் வழங்குகின்றன. இருப்பினும் […]

