கரூர் சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் 12 கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில்: முதல்வர் மற்றும் துணை முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானாவை ஒதுக்கிய நிலையில், மற்ற கட்சிகளுக்கு ஒதுக்காதது ஏன்..? விஜய் மீது செருப்பு வீசப்பட்டதையும், அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதையும் காணொளிகள் காட்டுகின்றன. கத்தியால் குத்தப்பட்டதாகவும் […]

ரஷ்யாவுடனான எரிசக்தி உறவுகளை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா மற்றும் சீனா மீது அமெரிக்கா அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதாகவும், ஆனால் அத்தகைய நடவடிக்கை எதிர் விளைவை ஏற்படுத்தக்கூடும் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பேசியுள்ளார். ரஷ்யாவின் வர்த்தக பங்காளிகள் மீது அமெரிக்கா அதிக வரிகளை விதித்தால், அது உலகளாவிய விலைகளை உயர்த்தி, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை அதிகமாக வைத்திருக்க கட்டாயப்படுத்தும் என்று புடின் எச்சரித்தார். சமீபத்தில், இந்திய […]

மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கும் முறையைத் தொடங்குவதற்கான பணிகளை மத்திய அரசுடன் இணைந்து முன்னெடுத்து வருவதாக தமிழக மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் தகவல். மேலும் தமிழகத்தில் விரைவில் ப்ரீபெய்டு மீட்டர் பொருத்தப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் வெளிவரும் தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 2026 முதல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் லிமிடெட் ( TNPDCL ) மாதாந்திரக் கட்டண முறையை அமல்படுத்த ஸ்மார்ட் […]

பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிற்கு வரிப் பகிர்வாக ரூ. 4144 கோடி விடுக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு, மாநிலங்கள், மூலதனச் செலவினங்களை விரைவுபடுத்தவும், வளர்ச்சி/மக்கள் நலன் தொடர்பான செலவினங்களுக்கு நிதியளிக்கவும், மத்திய அரசு 2025 அக்டோபர் 10 அன்று விடுவிக்க வேண்டிய வழக்கமான மாதாந்தரப் பகிர்வுடன் 2025, அக்டோபர் 1 அன்று ரூ. 1,01,603 கோடியை மாநில அரசுகளுக்கு கூடுதல் வரிப் பகிர்வாக விடுவித்துள்ளது. இதன்படி […]

மாணவர்களை ஆர்டிஇ ஒதுக்கீட்டின்கீழ் பதிவு செய்வதற்காக 10 நாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி(ஆர்டிஇ) தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். மாநிலம் முழுவதுள்ள 8 ஆயிரத்துக்கும் மேலான தனியார் பள்ளிகளில் சுமார் 1 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம். தமிழகத்தில் […]

ஆரோக்கியமான உடலைப் பராமரிக்க உணவுடன் கூடுதலாக, தண்ணீர் அவசியம். நமது உடல் 70% தண்ணீரால் ஆனது, ஆனால் ஆயுர்வேதம் தண்ணீரை ஒரு “மருந்து” என்று கருதுகிறது. சரியான நேரத்தில், சரியான அளவில் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமான உடலைப் பராமரிக்க மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. மனித உடலை உருவாக்கும் ஐந்து கூறுகளில் ஒன்றாக ஆயுர்வேதம் தண்ணீரை உள்ளடக்கியது. சரியான நேரத்தில், சரியான அளவில் தண்ணீர் குடிப்பது நோய்களைத் தடுக்கும். […]

செங்கல்பட்டு மாவட்டம் சூளேரி காட்டுக்குப்பம் கடற்கரை பகுதியில் கடலில் மூழ்கி உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சூளேரி காட்டுக்குப்பம் கடற்கரை பகுதியில் கடந்த மாதம் 28ம் தேதி மாலை சென்னை பெரம்பூர் அகரம் பகுதியில் இருந்து வேன் ஒன்றில் 17 நபர்கள் சுற்றுலா வந்துள்ளனர். அவர்களில் பெரம்பூர், […]

கர்நாடக மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (KMCRI) சமீபத்தில் ஒரு அரிய மருத்துவ நிலையில், ஒரு ஆண் குழந்தை தனது உடலுக்குள் மற்றொரு கருவுடன் பிறந்தது. கர்நாடக மாநிலம், தார்வாட் மாவட்டம், குந்த்கோல் தாலுகாவை சேர்ந்த ஒரு பெண், இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆனார். பிரசவத்துக்காக, ஹூப்பள்ளியின் அரசு சார்ந்த, ‘கிம்ஸ்’ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செப்டம்பர் 23ல் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் உடலில் சில மாற்றங்கள் […]

163 தொகுதியில் மக்களை சந்தித்தேன், 5 முதல் 6 மாவட்டத்தில் தான் காவல் துறை பாதுகாப்பு கொடுத்தனர், மற்ற இடங்களில் நம்முடைய அதிமுக தொண்டர்கள், கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் தான் பாதுகாப்பு கொடுத்தனர் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று தருமபுரியில் பேசிய அவர்; கரூரில் செப்டம்பர் […]