2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுகவும் பாமகவும் அங்கம் வகித்தன. ஆனால், 2024 மக்களவைத் தேர்தலின்போது பாஜக கூட்டணியைவிட்டு அதிமுக வெளியேறி விட்டது. அப்போது பாமக நிறுவனர் ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்பினார். ஆனால், தலைவர் அன்புமணியோ பாஜக கூட்டணியை விரும்பினார். […]

துளசி என்பது இந்து மதத்தில் நம்பிக்கை, செழிப்பு மற்றும் தூய்மையின் அடையாளமாக போற்றப்படுகிறது. இந்து மத நம்பிக்கைகளின்படி, துளசி மிகவும் புனிதமானதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. துளசிச் செடி இருக்குமிடத்தில் எதிர்மறை ஆற்றல் நிலைக்காது என்றும், வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் எப்போதும் நிறைந்திருக்கும் என்றும் நம்பப்படுகிறது. துளசி தேவியை வழிபடுவதன் மூலம் விஷ்ணு மற்றும் லட்சுமி தேவியின் அருளைப் பெற முடியும் என வேதங்கள் குறிப்பிடுகின்றன. குறிப்பாக, துளசி தொடர்பான […]

தற்போது கந்த சஷ்டி விரதம் தொடங்கியிருக்கும் நிலையில், நம் அனைவராலும் விரும்பிப் பாடப்படும் கந்த சஷ்டி கவசம் பாடலின் வரலாறு மற்றும் அதன் சிறப்புகள் குறித்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும். இந்தப் பாடலைத் தினமும் ஓதுவதால் உடலில் நேர்மறை ஆற்றல் பெருகி, சுறுசுறுப்பு அதிகரிக்கும் என்றும், அதனால் நம் செயல்பாடுகள் அனைத்தும் சிறப்பாக அமையும் என்றும் நம்பப்படுகிறது. இத்தகைய மன நிம்மதி தரும் வரிகளை வழங்கியவர் தேவராய சுவாமிகள் […]

இன்று பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசியில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. விழுப்புரம், கடலூரில் சில இடங்களில் கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், […]

விவசாயிகள் நலனில் தமிழக அரசுக்கு அக்கறை இருந்தால் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; காவிரி பாசன மாவட்டங்களில் அரும்பாடுபட்டு சாகுபடி செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்படாதது குறித்து உழவர்கள் கதறி அழுது முறையிட்டாலும் கூட, கொள்முதலில் இன்று வரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கொள்முதல் நிலையங்களுக்கு முன்பாக மழையில் நனைந்த நெல்லுடன் உழவர்கள் தவம் […]

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 27-ம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக 28-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதிஉருவாகியுள்ளது. இது மேற்கு,வடமேற்கு திசையில் மெதுவாகநகர்ந்து, இன்று […]

இந்தோனேசியாவில் நடந்த ஒரு திருமணம் உலகளவில் கவனம் பெற்றுள்ளது.. 74 வயதான தர்மன், 24 வயதான சோல்லா அரிகாவை மணந்தார், இது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மணமகன் தனது இளம் மணமகளுக்கு அசாதாரண மணமகள் விலையாக 3 பில்லியன் இந்தோனேசிய ரூபாயை (சுமார் 215,000 அமெரிக்க டாலர்கள்) வழங்கியதாக கூறப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2 கோடி கொடுத்து திருமணம் செய்துள்ளார்.. அக்டோபர் 1 ஆம் தேதி […]

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மீது அழுத்தம் கொடுக்கப்படாது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இனேஉ தெரிவித்தார். நடந்து வரும் வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் இந்தியா எவ்வாறு தொடரும் என்பதை தெளிவுபடுத்தினார். இந்தியா விவாதங்களுக்குத் திறந்திருக்கிறது, ஆனால் காலக்கெடுவுக்கு அல்ல என்று கோயல் கூறினார். மேலும் “நாங்கள் அமெரிக்காவுடன் பேசுகிறோம், ஆனால் நாங்கள் அவசரமாக ஒப்பந்தங்களைச் செய்வதில்லை, மேலும் காலக்கெடுவுடனோ அல்லது எங்கள் தலையில் துப்பாக்கியுடன் ஒப்பந்தங்களைச் […]

சந்தையில் உள்ள 112 மருந்துகள் தர சோதனைகளில் தோல்வியடைந்துள்ளதாக அரசு அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. பல்வேறு உடல்நல பிரச்சனைகளை குணப்படுத்த நம்மில் பலரும் மருந்துகளைப் பயன்படுத்துகிறோம்.. ஆனால் இப்போது மத்திய அரசு ஒரு அதிர்ச்சியூட்டும் அறிக்கையை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 2025 இல், சந்தையில் கிடைக்கும் மருந்துகள் சோதிக்கப்பட்டன. அவற்றின் தரம் சரிபார்க்கப்பட்டது. ஆனால் அவற்றில் 112 தர சோதனைகளில் தோல்வியடைந்தன. அதாவது, அவற்றின் பயன்பாடு காரணமாக நோய்வாய்ப்பட அதிக வாய்ப்பு […]