தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள் சம்பவங்கள் குறித்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது, அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 171,000 க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டனர், இது கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக உயர்ந்த எண்ணிக்கையாகும். இந்த எண்ணிக்கை வளர்ந்து வரும் மனநலப் பிரச்சினைகளை பிரதிபலிப்பது மட்டுமல்லாமல், சமூகத்திற்கும் அரசாங்கத்திற்கும் கடுமையான சவாலை ஏற்படுத்துகிறது. […]

கல்வி, வீரம், செல்வம் என எத்தனை இருந்தாலும், ஒரு மனிதனின் வாழ்வில் கல்வி அறிவு என்பது மிக மிக அவசியமான ஒன்று. சரியான நேரத்தில், சரியான முறையில் ஒருவருடன் உரையாடவும் பழகவும் உதவுவது கல்வி அறிவே. இத்தகைய மகத்தான அறிவையும், அதற்கும் மேலாக சாமர்த்தியத்தையும், புத்தி கூர்மையையும் அருளும் தெய்வமாகத் திகழ்பவள் சரஸ்வதி தேவி. வித்யாதேவியின் கருணை நம் வாழ்வில் பிரகாசிக்க, அவளை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாளாக விஜயதசமி […]

தமிழக முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில் டாஸ்மாக் கடைகளை அடைப்பது வழக்கம். அதன்படி, டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பார்கள். நாடு முழுவதும் இன்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதனால் தமிழக முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி […]

நாடு முழுவதும் 5862 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் 57 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, அதிகரித்துள்ள மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளின் கல்வித் தேவைகளை எளிதாக்கும் வகையில் நாடு முழுவதும் 57 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் தொடங்க ஒப்புதல் அளித்துள்ளது. 2026-27 முதல் ஒன்பது ஆண்டு காலத்தில் 57 […]

தமிழகத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலான அரசுத் துறை சார்ந்த வாகனங்களுக்கான பதிவுச் சான்று செல்லுபடியாகும் காலத்தை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதிகமான மாசு மற்றும் சாலை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறிவிட்ட பழைய வாகனங்கள் குறித்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து, மத்திய அரசு பழைய வாகனங்கள் தொடர்பான கொள்கையை கடந்த 2021-ல் வெளியிட்டது. இதன்படி, 10 வருடங்கள் பயன்பாட்டில் இருந்த டீசல் மற்றும் 15 வருட பெட்ரோல் […]

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK), பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து மூன்றாவது நாளாக, மக்கள் வீதிகளில் இறங்கி, தீ மூட்டி, சாலைகளை மறித்து போராடி வருகின்றனர், ஆனால் அரசாங்கம் போராட்டங்களை நசுக்க முயற்சிப்பதில் மும்முரமாக உள்ளது. புதன்கிழமை (அக்டோபர் 1, 2025), பாதுகாப்புப் படையினருக்கும் காஷ்மீரிகளுக்கும் இடையே கடுமையான வன்முறை வெடித்தது, இதன் விளைவாக போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் […]

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் முன்னாள் அமைச்சரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி பதறுவது ஏன்?’ என அதிமுக கேள்வி எழுப்பி உள்ளது. இது குறித்து அதிமுக வெளியிட்ட அறிக்கையில்; கூட்ட நெரிசல் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்திருக்கிறோம் என்று திமுக அரசு அறிவித்த பிறகு, மின்துறை அதிகாரி, மாவட்ட ஆட்சியர், சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் செய்தியாளர் சந்திப்பு நடத்துகின்றனர். டிஜிபி […]

ராஜஸ்தானில் இருமல் சிரப் குடித்த 2 குழந்தைகள் பலியான நிலையில், மருந்து பாதுகாப்பானது என்பதை நிரூபிக்க அதை உட்கொண்ட மருத்துவரும் மயக்கமடைந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் அரசாங்கத்திற்காக கேசன் பார்மா என்ற நிறுவனத்தால் டெக்ஸ்ட்ரோமெத்தோர்பான் ஹைட்ரோபுரோமைடு என்ற சேர்மம் கொண்ட இருமல் சிரப் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இந்தநிலையில் கடந்த வாரம் ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயது நிதீஷுக்கு இருமல் மற்றும் சளி ஏற்பட்டதால், அவரது பெற்றோர் […]

நீதிமன்றமும், விசாரணை ஆணையமும் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் பொழுது, செந்தில் பாலாஜி இத்தனை பதட்டப்படுவதுதான் பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது என முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “கரூர் தவெக பொதுக்கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி, பொதுமக்கள் உயிரிழந்தது குறித்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்கள் குழு, பாதிக்கப்பட்ட பொதுமக்களைச் சந்தித்து, இந்த துயர நிகழ்வு தொடர்பான விசாரணை, பதவியிலிருக்கும் உச்சநீதிமன்ற […]