இந்திய அரசு ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது. தற்போது, ​​அடிப்படை சம்பளத்தில் மாதம் ரூ.15,000 வரை சம்பாதிப்பவர்களுக்கு மட்டுமே இபிஎஃப் கட்டாய சேர்க்கை பொருந்தும். ரூ.15,000க்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கு கட்டாய காப்பீட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படும். நிறுவனங்களும் அவற்றைச் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. ஆரம்ப நிலை சம்பளங்கள் கூட இந்த வரம்பைத் தாண்டி வருவதால், இது நகர்ப்புறங்களில் ஓய்வூதிய காப்பீட்டில் இடைவெளியை உருவாக்குகிறது. […]

தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.. வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து, இன்று காலை தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவுகிறது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு […]

நாம் தினமும் என்ன சாப்பிடுகிறோம் என்பதுதான் நம் ஆயுட்காலத்தையும், உடல் நல தரத்தையும் நிர்ணயிக்கிறது. உடற்பயிற்சி, தூக்கம், மனஅழுத்தக் கட்டுப்பாடு ஆகியவை முக்கியமானவை என்றாலும், உணவு தேர்வு உடல்நலத்துக்கு இன்னும் அதிகமான தாக்கத்தை உண்டாக்குகிறது. இன்று உங்கள் உணவில் சில சிறிய மாற்றங்களைச் செய்தால், பல ஆண்டுகள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவும். உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜைச் சேர்ந்த புற்றுநோய் நிபுணர் டாக்டர் அர்பித் பன்சால், தனது இன்ஸ்டாகிராம் பதிவில், […]

இன்று காலை வங்கதேசத்தில் 5.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 6 பேர் உயிரிழந்தனர்.. மேலும் பலர் காயமடைந்தனர் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேற்கு வங்கம் மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்களில் நிலநடுக்கம் பரவலாக உணரப்பட்டது, இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர். இந்த நிலநடுக்கம் (உள்ளூர் நேரப்படி) காலை 10.38 மணியளவில் ஏற்பட்டது.. இந்த நிலநடுக்கத்தின் மையம் தலைநகர் டாக்காவில் இருந்து சுமார் […]

ஃபரீதாபாத் அல் ஃபலாஹ் மருத்துவ கல்லூரி மருத்துவர்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் வெளிநாட்டு நபர் ஒருவர், செங்கோட்டை வெடி குண்டு வழக்கில் தொடர்புடைய ஒருவருக்கு குண்டு தயாரிக்கும் முறைகள் பற்றிய விரிவான வழிகாட்டுதல்களை அனுப்பியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கார் வெடிகுண்டு தாக்குதலை நடத்திய உமர் நபியின் சக ஊழியரான முஜம்மில் அகமது கனாய் (Muzammil Ahmad Ganai), வெளிநாட்டை சேர்ந்த தீவிரவாத செயலை உத்தரவிடும் நபரிடம் இருந்து இருந்து குறியாக்கப்பட்ட (encrypted) […]

திருமணமான ஒரு பெண்ணுடன், அவருடைய சம்மதத்தின் பேரில் பாலியல் உறவு கொண்ட பிறகு, அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்தால், அது பலாத்காரம் ஆகாது என்று கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. முந்தைய உறவை ஒரு காரணமாக காட்டி, சம்பந்தப்பட்ட நபரை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தவோ அல்லது அவர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால், அந்தப் பெண் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறவோ முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. […]