தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலை மட்டுமே இலக்காக வைத்து பணியாற்றி வரும் விஜய்க்கு ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது கட்சியை தொடங்கியதில் இருந்து ஒன்றரை ஆண்டுகளில் இரண்டு முக்கிய மாநாடுகளை நடத்தியுள்ளார். இதற்கு இடையே நடந்த 2024 மக்களவை தேர்தலிலும், ஈரோடு இடைத்தேர்தலிலும் தவெக போட்டியிடவில்லை. […]

ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்யக் கூடாது. ஓய்வுபெறும் நாளில் அரசுப் பணியாளர்களை தற்காலிக பணிநீக்கத்தில் வைக்கும் நடைமுறை தவிர்க்கப்படும்’ என்று சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் கடந்த 2021 செப்டம்பர் 7-ம் தேதி அறிவித்தார். இதை செயல்படுத்தும் விதமாக, அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படக்கூடாது என்பதை ஒழுங்கு நடவடிக்கை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று 2021 அக்டோபர் 11-ம் […]

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் விலை செப்டம்பர் 1ஆம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, சன்னரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2,545 மற்றும் பொதுரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2,500 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும். இதில், தமிழக அரசு வழங்கும் ஊக்கத்தொகையாக சன்னரகத்திற்கு ரூ.156 மற்றும் பொதுரகத்திற்கு ரூ.131 வழங்கப்படும். திமுக […]

ஜெர்மனி, இங்கிலாந்துக்கு முதல்வர் ஸ்டாலின் செல்வது சுற்றுலா பயணம் என பாமக தலைவர் அன்புமணி விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.10.62 லட்சம் கோடி முதலீடு திரட்டுவதற்கான 922 முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டிருப்பதாகவும், தாம் கையெழுத்திட்ட அனைத்து முதலீட்டு ஒப்பந்தங்களும் நடைமுறைக்கு வந்து விட்டதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். திமுக அரசு கையெழுத்திட்ட முதலீட்டு ஒப்பந்தங்களில் 10% கூட நடைமுறைக்கு […]

உடற்பயிற்சி செய்வதற்கான நேரம் இல்லையென பலர் கூறினாலும், தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது உடலுக்கும், இதயத்திற்கும் பல நன்மைகளை தரும் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். குறிப்பாக, எடை குறைப்பதற்காக ஜிம் செல்ல வேண்டுமென்ற அவசியமில்லை. சாதாரண நடைபயிற்சியே கொழுப்பு அளவுகளை கட்டுப்படுத்த உதவும் எளிய வழியாகும். அதிக கொழுப்பு, குறிப்பாக “LDL” எனப்படும் கெட்ட கொழுப்பு அதிகரித்தால், அது இரத்த நாளங்களில் படிந்து பிளேக் உருவாக்குகிறது. இதன் விளைவாக மாரடைப்பு, […]

தமிழகத்தில் இன்று முதல் செப்டம்பர் 5-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் நாளையும், நாளை மறுதினமும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 […]

நவராத்திரி என்பது பெண் சக்தியின் அபிமான விழாவாக பாரம்பரியமாக கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகை ஆகும். இந்த பண்டிகையின் வழிபாடு வருடம் முழுவதும் நான்கு முறை நடைபெறுகிறது. அவை ஆஷாட நவராத்திரி, சாகம்பரி நவராத்திரி, சைத்ர நவராத்திரி மற்றும் சாரதா நவராத்திரி ஆகும். இவை தவிர, புஷ்ப நவராத்திரியும் குறிப்பிட்ட பகுதிகளில் கடைபிடிக்கப்படுகிறது. இவற்றில் புரட்டாசி மாதத்தில் நடைபெறும் சாரதா நவராத்திரி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மிகப் பிரபலமாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் […]

குரு, தனது ராசியை சுமார் 13 மாதங்களுக்குப் பிறகு மாற்றுவதன் மூலம் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும். இந்தப் பெயர்ச்சி மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமின்றி, நாடுகள் மற்றும் உலக அளவிலும் பல முக்கிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். குரு, தற்போது மிதுன ராசியில் பயணித்து வரும் நிலையில், அக்டோபர் மாதத்தில் அது கடக ராசியில் தனது உச்சபட்சம் கொண்ட பரிமாணத்தை அடையும் என்று பொருளாதார மற்றும் ஜோதிட அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். […]

வீட்டில் கொசுக்கள் சுற்றித்திரிவது என்பது பொதுவான பிரச்சனை தான்.. கொசுக் கடியை தடுக்க பலரும் கொசுவர்த்தி சுருள்கள் அல்லது ஸ்ப்ரேக்களைப் பயன்படுத்துகிறார்கள், இது உடனடி நிவாரணம் தரும் என்று நினைக்கிறார்கள். இருப்பினும், இந்த கொசுவர்த்தி சுருள்களைப் பயன்படுத்துவது நம் ஆரோக்கியத்தில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது பலருக்குத் தெரியாது. இந்த ரசாயனங்கள் கொசுக்களைக் கொல்வது மட்டுமல்லாமல், நமது உடல் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். எனவே, இது தொடர்பாக எச்சரிக்கை உடன் […]

திருவள்ளூரில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள எம்.பி. சசிகாந்த் செந்தில் மருத்துவமனையில் அனுமதி. ரத்த அழுத்தம் குறைந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 2018 ல் சமக்ர சிக்க்ஷா அபியான் என்ற ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதில் பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டமும் சேர்க்கப்பட்டது. இந்த திட்டத்தில் தமிழகம் இணையாதால் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்திற்கு என வர வேண்டிய தொகையை மத்திய […]