ஜூன் மாதம் சாதாரண குடிமக்களுக்கு முக்கியமானதாக இருக்கப் போகிறது. ஏனெனில் ஜூன் 1 முதல் எல்பிஜி எரிவாயு விலைகள் முதல் நிலையான வைப்பு வட்டி விகிதங்கள் வரை சில முக்கியமான மற்றும் பெரிய மாற்றங்கள் இருக்கலாம். எனவே நாளை (ஜூன் 1) முதல் என்ன மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதை இனி பார்க்கலாம். நாளை முதல் கேஸ் சிலிண்டர், ரேஷன் கார்ட், ஆதார் அட்டை, கிரெடிட் கார்ட், ஏடிஎம் மூலம் பிஎப் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
இந்திய ஆன்மிக மரபில், மலை மீது எழுச்சி தரும் கோயில்கள் என்றும், பக்திக்கு வலிமை சேர்க்கும் இடங்களாகவும் பெருமை பெற்றுள்ளன. அவ்வாறானதொரு திருத்தலமாக, நாமக்கல் அருகேயுள்ள கூலிப்பட்டியில் அமைந்துள்ள கந்தகிரி பழனி ஆண்டவர் கோயில் மக்கள் நம்பிக்கையையும், பக்தியின் ஆழத்தையும் தழுவிய மலைமேல் காட்சியளிக்கிறது. மூன்று நூற்றாண்டுகளாக பக்தர்களை தன்னை நோக்கி இழுக்கும் இத்தலம், முருகபெருமானின் அருள் பெரும் இடமாக விளங்குகிறது. இங்கு ‘அண்டி கோலத்தில்’ மலைமீது திகழும் முருகனைக் […]
நம் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது ஆரோக்கியமானது என நினைத்தாலும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்கள் கூட திடீர் மாரடைப்பில் இருந்து தப்பிக்க முடியமால் போவதை வெளிப்படுத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே, ஓட்டப்பந்தய வீரர்கள், விளையாட்டு வீரர்கள் அல்லது ஜிம்முக்கு செல்வோர் திடீரென மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் கவலை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. இது ஃபிட்டாக இருபவர்களை கூட தாக்கும் என்ற முக்கியத்துவத்தை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. Indian Heart […]
பாமகவின் அதிகாரப்பூர்வ முகவரி தைலாபுரம் தோட்டம் என்று இருந்து வந்த நிலையில், தற்போது அலுவலகத்தின் முகவரியை அன்புமணி ராமதாஸ் அதிரடியாக மாற்றியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும், பாமக தலைவருமான அன்புமணிக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. இருவரும் மாறி மாறி கருத்துக்களையும், அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இதனால், தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதற்கிடையே, அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது […]
தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்குவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால், தமிழ்நாட்டில் இருந்து 6 புதிய எம்பிக்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதன்படி, திமுகவில் இருந்து 4 எம்.பி.க்களும், அதிமுகவில் இருந்து 2 எம்.பி.க்களும் மாநிலங்களவைக்கு […]
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து முதன்முதலாக பரவிய கொரோனா தொற்று உலகையே புரட்டிப் போட்டது. இந்த கொரோனா வைரஸால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, முழு ஊரடங்கு, தடுப்பூசி ஆகியவற்றால் கொரோனா கட்டுக்குள் இருந்தது. ஆனால், தற்போது மீண்டும் வேகமாக பரவி வருவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஹாங்காங், சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கொரோனா தொற்று வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இந்தியாவை […]
தமிழ்நாட்டில் கோவில்கள் அதிகமாக உள்ள ஒரு நகரம் என்றால் அது கும்பகோணம். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கிறது. இங்கு செல்லும் பக்தர்கள், தங்கள் வாழ்க்கையில் வரும் துன்பங்கள், சிக்கல்கள், தோஷங்கள் எல்லாம் அகல பிரார்த்தனை செய்கிறார்கள். கும்பகோணத்துக்கு “தேவாரத் திருத்தலங்கள்”, “நவகிரக கோவில்கள்”, மற்றும் பல சக்தி ஸ்தலங்கள் உள்ளதால், இது கோவில் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இது “கோவில் நகரம்” என்ற வண்ணம் மட்டுமல்ல; இது நவகிரகங்களை பிரதிபலிக்கும் […]
பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” தாக்குதலின் போது ரகசிய தகவல்கள் கசிய விட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில், பிரபல யூடியூபர் சன்னி யாதவ் உட்பட 3 பேரை தேசிய புலனாய்வு முகமை (NIA) கைது செய்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் சன்னி யாதவ். பைக் மூலம் இந்தியாவைச் சுற்றியும், பிற நாடுகளுக்கும் சென்று சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிட்டு புகழ் பெற்றவர். இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடங்கியபோது அவர் […]
அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பான ஒரு முக்கியமான விதியை மத்திய அரசு மாற்றியுள்ளது. புதிய சட்டத்தின்படி, அரசு இனி ஓய்வுபெற்றவர்களுக்கு சம்பள உயர்வு போன்ற பிற நிதி உதவிகளை (அகவிலைப்படி உயர்வு, புதிய ஊதியக் குழுவின் சலுகைகள்) கிடைக்காது. இனி 8வது சம்பளக் குழுவின் பரிந்துரைகள் மற்றும் அகவிலைப்படி (DA) உயர்வுகள் தற்போது பணியில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். தற்போது ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், 1972ல் வந்த […]
கர்நாடக மாநிலம் பெங்களூரு காடுகோடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். 18 வயதுக்குட்பட்ட அந்த சிறுமி வீட்டின் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக காரில் வந்த ஒரு மர்ம நபர், தன்னை நடன பயிற்சியாளர் என சிறுமியிடம் கூறியுள்ளார். மேலும், சிறுமிக்கு நடனம் கற்றுக் கொடுப்பதாக கூறியுள்ளார். அந்த சிறுமியும் அதனை நம்பி, நடனம் கற்றுக் கொள்ளும் ஆசையில், அந்த நபரின் காரில் […]