நகை அடமானத்திற்கான புதிய விதிகள் அடுத்தாண்டு ஜனவரி வரை ஒத்திவைத்து ஆர்.பி.ஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏழை எளிய மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் நம்பி இருப்பது வங்கி நகைக்கடனை மட்டுமே, அவசர தேவைக்கு நகைகளை அடகு வைத்து பணத்தை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் புதிதாக 9 விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் சாதாரண மக்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. அதாவது, நகைக்கடன் வாங்குபவர் அதை மீட்கும் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் போது, புற்றுநோய்களின் பாதிப்பு ஒரு லட்சம் பேரில் 173 முதல் 280 வழக்குகள் அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் புவி வெப்பமடைதல் பெண்களுக்கு புற்றுநோயை மிகவும் பொதுவானதாகவும் ஆபத்தானதாகவும் மாற்றக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பகுதி உலகின் பிற பகுதிகளை விட மூன்று தசாப்தங்களுக்கு முன்பே மூன்று முதல் நான்கு […]
இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மே 30 ஆம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது. தங்கம் என்றாலே, மக்கள் மத்தியில் ஒருவித மவுசு இருந்து கொண்டேதான் இருக்கும். ஏனென்றால், முதலீடு செய்வதற்கும், எதிர்கால தேவைக்காகச் சேமிப்பதற்கும், பரிசு கொடுப்பதற்கு என பல்வேறு காரியங்களுக்கு தங்கம் முக்கிய காரணியாக விளங்குகிறது. அதுமட்டுமின்றி, இந்திய மக்களின் சேமிப்பில் முதலிடம் வகுப்பது தங்கம் உள்ளிட்ட ஆபரணங்கள் தான். […]
சேலம் மாவட்டத்தில் வருகின்ற 31.05.2025 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட திட்டக்குழு (FBDP) மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 31.05.2025 அன்று பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் உற்பத்தி, […]
உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் சிட்டியிலிருந்து 6.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தப்கேஷ்வர் மகாதேவ் கோவில். தன்சு ஆற்றின் (Tons river) கரையில் அமைந்துள்ள இக்கோவில் இயற்கையான குகையில் கட்டப்பட்ட கோவிலாகும். இது தப்கேஷ்வர் கோயிலை சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான முக்கிய ஸ்தலங்களில் ஒன்றாகும். கம்பீரமான மலைகளால் சூழப்பட்டுள்ளது, இந்த புனித இடத்திற்கு அழகு சேர்க்கிறது என்றால் மிகையாகாது. கோவிலுக்கு செல்வதற்கு காடு வழியாக சிறிது தூரம் நடக்க வேண்டும். […]
நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் ஐ.நா., செயலகம், அதன் ஊழியர்களில் 6,900 பேரை பதவி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தியின்படி, ஐக்கிய நாடுகள் செயலாளர் அலுவலகம் அதன் 3.7 பில்லியன் டாலர் பட்ஜெட்டை 20% குறைத்து, சுமார் 6,900 பணியிடங்களை நீக்க திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும் அந்த அறிவிப்பில் ஜூன் 13ம் தேதிக்குள் இந்த பதவி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று […]
திருமணமான பெண் அரசு பணியாளர்களின் ஓராண்டு மகப்பேறு விடுப்பு அவர்களின் தகுதிகாண் பருவத்திலும் கணக்கில் எடுத்து கொள்ள அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பெண் பணியாளர்களுக்கான மகப்பேறு விடுப்பு தொடர்பான முக்கிய மாற்றத்தை அரசு இன்று அறிவித்துள்ளது. திருமணமான பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு, இப்போது தகுதிகாண் பருவத்திலும் (Probation Period) சேவைக்காலமாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய […]
குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், பிரான்ஸ் நாட்டில் வரும் ஜூலை 1ம் தேதி முதல் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் புகையிலை பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் முயற்சியாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடற்கரைகள், பொதுத் தோட்டங்கள், பள்ளிகளுக்கு வெளியே உள்ள பகுதிகள் மற்றும் பொதுப் போக்குவரத்து நிறுத்தங்கள் போன்ற பரந்த அளவிலான வெளிப்புற இடங்களில் தடை உத்தரவு பொருந்தும். எனினும், கஃபே உள்ளிட்ட இடங்கள் புதிய விதிகளுக்கு […]
பாகிஸ்தானில் நடத்தப்பட்ட பேரணியில் பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் சைஃபுல்லா கசூரி என்ற பயங்கரவாதி கலந்து கொண்டு பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு – காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதையடுத்து, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த அதிரடி தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக கூறப்பட்டது. […]
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ராஜேஷ். ’அவள் ஒரு தொடர் கதை’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இவர் தமிழ் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு சினிமாவிலும் நடித்துள்ளார். தற்போது 75 வயதாகும் நடிகர் ராஜேஷ் நேற்று திடீரென காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் உள்ளிட்ட நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள மருத்துவர் காந்தராஜ், “யோகா செய்வதால் சில பயன்கள் உள்ளன. […]