கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதி இருந்தும், விடுப்பட்டவர்களை இணைக்கும் நோக்கில் மக்களுடன் முதல்வர் முகாம் நடத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தற்போது 1.14 கோடி பேர் பயனடைந்து வரும் நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க உள்ளது. தமிழ்நாடு அரசு குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கும் வகையில், “கலைஞர் மகளிர் உரிமைத்தொகை” திட்டத்தை கடந்த 2023ஆம் ஆண்டில் இருந்து செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்படி, மாதந்தோறும் தகுதியுள்ள பெண்களின் வங்கிக் […]

தமிழக பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரத்தை, கவர்னரிடம் இருந்து, மாநில அரசுக்கு மாற்றம் செய்து, சட்டத்தில் திருத்தம் செய்து, 10 சட்ட மசோதாக்கள், சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன. இதில் தமிழக பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி இயற்றப்பட்ட சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசாங்கம் மேல்முறையீடு செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு […]

ஜூன் 15 ஆம் தேதி நீட் முதுகலை தேர்வை நடத்துவது சாத்தியமில்லை என்று தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. மருத்துவத்தில் முதுகலை படிப்புகளில் சேருவதற்கான இந்தத் தேர்வை ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடத்த அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் வாரியம் விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளது. முன்னதாக ஜூன் 15 ஆம் தேதி இரண்டு ஷிப்டுகளாக நீட் முதுகலை தேர்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் மே 30 […]

ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாக ஆர்சிபி அணி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டி நேன்று பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே அகமதபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஆர்சிபி அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களாக பிலிப்ஸ் சால்ட் மற்றும் விராட் கோலி ஆகியோர் களம் இறங்கினர். சால்ட் […]

ஆபரேஷன் சிந்தூர் பெயரை வைத்து வாக்குகளை பெற பாஜக திட்டமிட்டுள்ளது என பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் குற்றம்சாட்டி உள்ளார். கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இதையடுத்து ஆபரேஷன் சிந்தூர் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு விளக்கம் அளிப்பதற்காக நடத்தப்பட்ட கூட்டத்தில் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும் […]

1946ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கொனேட்டம்பட்டுவில் பிறந்தவர் எஸ்பிபி. எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்பிபி என்றும், பாலு என்றும் மக்களிடையே பிரபலமான அவரின் முழுப்பெயர் ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் ஆகும். அவரது பெற்றோர் பெயர் எஸ் பி சம்பமூர்த்தி மற்றும் சகுந்தலம்மா. சிறு வயது முதலே இசையுடன் வளர்ந்தார் எஸ்பிபி. பொது நிகழ்ச்சிகளிலும் பாடி பரிச்சயம் பெற்றார். முறையான சாஸ்திரீய சங்கீதம் கற்கவில்லை என்றாலும் […]

குறைந்த வட்டி விகிதத்தில் சுயதொழிலுக்காக வழங்கப்படும் கடன்திட்டத்தை சிறுபான்மையினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அழைப்பு விடுத்துள்ளார். ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகம், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் ஆகிய அலுவலகங்களில் விண்ணப்பத்தை பெற்று வங்கி கோரும் ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். சென்னை மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு, சுய வேலைவாய்ப்பு […]

2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 5% ஆகக் குறைக்கும் என்று நோமுரா கணித்துள்ளது. உலகளாவிய தரகு நிறுவனமான நோமுராவின் அறிக்கையின்படி, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள்,ரெப்போ விகிதத்தை முழு சதவீதப் புள்ளியால் – 6 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்க வாய்ப்புள்ளது. ‘ஆசியா H2 அவுட்லுக்’ அறிக்கையில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (ரிசர்வ் வங்கியின் கணிக்கப்பட்ட 6.5 […]

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூதாட்டி ஒருவர் பலி என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தொற்று நோயை மக்கள் மறந்திருந்த நிலையில், ஆசிய நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், இந்தியாவிலும் இதன் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் இந்தியாவில் 363 பேர் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை […]

12-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் நகல் இன்று மதியம் வெளியிடப்பட உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பில்: 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கான நகல் இன்று மதியம் வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து மாணவர்கள் தங்களின் விடைத்தாள் நகல்களை www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். […]