இளம் தலைமுறையினர் முதல் நடுத்தர வயதினர் வரை இன்று பலரும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனை நீண்டகால முடி உதிர்வு ஆகும். இந்தப் பிரச்சனை அதிகரித்து வரும் நிலையில், பிரபல ஆரோக்கிய மற்றும் நலவாழ்வு நிபுணர் டிம்பிள் ஜங்கடா, முடி உதிர்வுக்கான முக்கிய காரணங்களையும், அதைத் தடுக்க வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய சிகிச்சை முறைகளையும் விளக்கியுள்ளார். இரும்புச்சத்துக் குறைவு : முடி வேர்கள் ஓய்வு நிலைக்குச் சென்றுவிடுவதால் தான் அதிக அளவில் […]

சென்னை செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனமான எச்.சி.எல். டெக்னாலஜிஸ் (HCL Tech), தற்போது Process Associate/Associate (Voice Process) பணி இடங்களுக்கான புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணிக்கான நேர்காணல் வரும் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் B.Com, BBA, MBA, M.Com, B.Sc, மற்றும் BCA போன்ற பட்டப் படிப்புகளை முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். முக்கியமாக, […]

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ‘ஆண்டவன் உத்தரவு’ என்ற விநோதமான வழிபாடு மீண்டும் பக்தர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டவன் உத்தரவு கண்ணாடிப் பேழையில், சுமார் 7 மாதங்களுக்குப் பிறகு, கடல் நீர் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மலைக்கோயிலில், முருகப் பெருமான் பக்தர்களின் கனவில் வந்து குறிப்பிட்ட ஒரு பொருளை வைத்து வழிபட சொல்வது இக்கோயிலின் தனிச் […]

நடிகர் தனுஷ் இயக்கி, நடித்து, நித்யா மேனன், சத்யராஜ், அருண் விஜய் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்த ‘இட்லி கடை’ திரைப்படம் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்கள் வந்தபோதும், படக்குழுவினர் படத்தின் வெற்றியை தற்போது கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் தனுஷ் மற்றும் அவரது குடும்பத்தினர், தங்கள் குலதெய்வக் கோவிலில் தரிசனம் செய்தது தேனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, படம் வெளியாவதற்கு இரண்டு […]

நுகர்வோர் விலைக் குறியெண் தொகுப்பில் இலவச பொது விநியோகத் திட்டப் பொருட்களின் கையாளுதல் குறித்த கலந்துரையாடல் அறிக்கை 2.0 வெளியிடப்பட்டுள்ளது. புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், நுகர்வோர் விலைக் குறியெண்ணின் (CPI) அடிப்படைத் திருத்தத்தை மேற்கொண்டு வருகிறது. இந்த செயல்முறையில், விலை சேகரிப்பின் பரப்பை அதிகரித்தல், தற்போதுள்ள வழிமுறைகளைச் செம்மைப்படுத்துதல், புதிய தரவு மூலங்களை ஆராய்தல் மற்றும் விலை சேகரிப்பு மற்றும் குறியீட்டுத் தொகுப்பில் நவீன தொழில்நுட்பத்தை திறம்படப் […]

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பிய 3 இளைஞர்கள், அதிகாலை நடந்த கோர விபத்தில் சிக்கினர். இந்த விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த குருமூர்த்தி (21), ரஞ்சித் (18), பாரத் (18) ஆகிய மூன்று இளைஞர்களும் குலசேகரன்பட்டினம் கோவிலில் மாலை அணிந்து தசரா விரதத்தை மேற்கொண்டனர். திருவிழா […]

மழைக் காலங்களில் குழந்தைகளுக்கு சளி மற்றும் இருமலால் ஏற்படும் தொந்தரவுகள் தவிர்க்க முடியாதவை. ஆனால், இதற்காக பெரும்பாலான நேரங்களில் இருமல் மருந்துகளை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று குழந்தை நல மருத்துவர்கள் பெற்றோர்களுக்கு தெளிவான அறிவுரையை வழங்கியுள்ளனர். குழந்தைகள் நல மருத்துவர்கள் தரப்பில் இருந்து வெளியாகி உள்ள தகவலின்படி, பெரும்பாலான இருமல் மருந்துகளில் பலதரப்பட்ட ரசாயன மூலக்கூறுகள் கலந்தே தயாரிக்கப்படுகின்றன. இவற்றால் இருமலுக்கு முழுமையான தீர்வு கிடைக்குமா என்பது […]

தேசிய நெடுஞ்சாலைக் கட்டண (விகிதங்களை நிர்ணயித்தல் மற்றும் வசூலித்தல்) (மூன்றாவது திருத்தம்) விதிகள், 2025, வரும் 2025 நவம்பர் 15 முதல் நடைமுறைக்கு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட்டேக் இல்லாத பயனர்களிடையே டிஜிட்டல் முறையிலான கட்டணங்களை ஊக்குவிக்கவும், ரொக்கப் பரிவர்த்தனைகளை முற்றிலுமாக அகற்றும் நோக்கில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டண (விகிதங்களை நிர்ணயித்தல் மற்றும் வசூலித்தல்) விதிகள், 2008-ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. புதிய விதியின்படி, செல்லுபடியாகும் மற்றும் செயல்படும் […]