fbpx

உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டங்கள் மூலம் 2023, நவம்பர் வரை ரூ.1.03 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது இது ரூ.8.61 லட்சம் கோடி உற்பத்தி / விற்பனைக்கும், 6.78 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்பு (நேரடி மற்றும் மறைமுக) உருவாக்கத்திற்கும் வழிவகுத்தது. பெரிய அளவிலான மின்னணு உற்பத்தி, மருந்துகள், உணவு பதப்படுத்துதல், தொலைத்தொடர்பு, கட்டமைப்பு போன்ற …

2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 15.92 லட்சம் புதிய ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதைத் தொழிலாளர் அரசு கழகத்தின் இ.எஸ்.ஐ.சி தற்காலிக சம்பளப் பட்டியல் தரவு தெரிவிக்கிறது. 2023 நவம்பர் மாதத்தில் சுமார் 20,830 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு, தொழிலாளர் அரசு ஈட்டுறுதித் திட்டத்தின் சமூகப் பாதுகாப்புக் குடையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த …

வங்கிகள் மற்றும் என்பிஎப்சியில் (NBFC) கடனைத் திருப்பிச் செலுத்தாததற்காக அபராதக் கட்டணங்களை வருமானத்தை அதிகரிக்கும் கருவியாகப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் திருத்தப்பட்ட நியாயமான கடன் நடைமுறை ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) வருவாய் வளர்ச்சிக்காக …

கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்த தங்கத்தின் விலை இன்று அதிரடியாக ரூ.320 குறைந்துள்ளது. இது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.46,480 ஆக விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.5,810 ஆகவும் …

உங்கள் வாகனத்தில் Fastag இருந்தால், அதன் KYC விதிமுறையை ஜனவரி 31க்குள் அப்டேட் செய்ய வேண்டும். மின்னணு கட்டண வசூல் அமைப்பின் செயல்திறனை அதிகரிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஜனவரி 31 க்குப் பிறகு, KYC விதிகளை நிறைவேற்றாத ஃபாஸ்டேக்குகள் வங்கிகளால் செயலிழக்கப்படும் அல்லது தடைப் பட்டியலில் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், FASTag …

2024-2025 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டு ஆண்டுக்கான (AY) ஆண்டு மொத்த வருமானம் 50 லட்சத்திற்கு மேல் உள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களால் தாக்கல் செய்யப்படும் மற்ற படிவங்களுடன் ITR-4 ஐ வருமான வரித்துறை சமீபத்தில் அறிவித்துள்ளது. உங்கள் வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்வது மிகவும் சிக்கலானது அல்ல.
.
ITR-4 படிவம் என்றால் …

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி தோவாளை மலர்சந்தையில் பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்குவதற்காக தற்போது பொதுமக்கள் முன்வந்துள்ளனர். அதில், பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தோவாளை மலர்சந்தையில் ஒரு கிலோ ரூ.1,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த மல்லிகை, தற்போது ரூ.2,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. …

உங்கள் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டும், இல்லையெனில் அபராதம் செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு வங்கியும் வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பை வைத்திருக்குமாறு அறிவுறுத்துகிறது. உங்களிடம் ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்கு இருந்தால், குறைந்தபட்ச தொகையை கணக்கில் வைக்காததற்காக அபராதம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. அதே சமயம், ஒவ்வொரு வாடிக்கையாளரும் பொதுவான சேமிப்புக் …

2023 டிசம்பரில் இந்தியாவின் சில்லறைப் பணவீக்கம் 5.69 சதவீதமாக இருந்தது.

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் 2012=100 அடிப்படையில் அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டெண் மற்றும் 2023 டிசம்பர் மாதத்திற்கான கிராமப்புற, நகர்ப்புற மற்றும் ஒருங்கிணைந்த நுகர்வோர் உணவு விலை குறியீட்டை வெளியிட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட 1114 நகர்ப்புற …