fbpx

2014-ம் ஆண்டில் 204 நிலக்கரி சுரங்கங்கள் ரத்து செய்யப்பட்ட பின்னர், நிலக்கரி சுரங்கங்கள் வெளிப்படையான நடைமுறை மூலம் மற்றும் மின்சாரம் மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத துறைகள் என பல்வேறு இறுதி பயன்பாடுகளுக்காக ஏலம் விடப்படுவதாக நிலக்கரி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

தனியார் நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏல அடிப்படையிலான தருணம் நிறைவடைந்த பின்னர், நாட்டின் உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் நிலக்கரி …

இந்தியாவில் தீபாவளி கொண்டாட்டம் மகிழ்ச்சியான உணர்வை வெளிப்படுத்தியது மட்டுமின்றி, கணிசமான பொருளாதார தாக்கத்தையும் கண்டுள்ளது. தீபாவளி என்றாலே பட்டாசு விற்பனை மற்றும் இனிப்பு பலகாரங்கள் விற்பனை கணிசமாக உயர்ந்து காணப்படும்.

இம்முறை வழக்கத்திற்கு மாறாக நாடு முழுவதும் ரூ.27,000 கோடி மதிப்பிலான தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வணிகர் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. தீபாவளி விற்பனை தொடங்கியதில் …

வருங்கால வைப்பு நிதி செலுத்தத்தவறிய நிறுவனங்களிடமிருந்து நிலுவைத் தொகையை வசூலிக்க 2023 டிசம்பர் முதல் 2024 பிப்ரவரி முடிய மூன்று மாத காலத்திற்கு சிறப்பு இயக்கம் ஒன்றை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஒரு சிறப்பு மீட்பு இயக்கத்தை நடத்துகிறது.

வருங்கால வைப்பு நிதியை செலுத்தத் தவறிய அனைத்து நிறுவனங்களும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, …

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, கடந்த சில நாட்களாக இறங்குமுகமாக இருந்த தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.45,160-க்கு …

முஹுரத் வர்த்தக அமர்வின் போது, முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் குறியீட்டு வர்த்தகத்தை நடத்தி, புதிய நிதியாண்டில் நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தேடுகின்றனர்.

பங்குச் சந்தைகளான பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (பிஎஸ்இ) மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (என்எஸ்இ) தீபாவளி முஹுரத் வர்த்தக அமர்வுக்காக நவம்பர் 12 ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேரம் திறந்திருக்கும். இரு பங்குச் …

இந்திய அஞ்சல் துறை, மத்திய மற்றும் மாநில அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலமாக டிஜிட்டல் முறையில் வாழ்நாள் சான்றிதழைச் சமர்பிக்கும் சேவையை தபால்காரர்கள் மூலம் வழங்கிவருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற தங்கள் வருடாந்திர வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்நிலையில் நேரில் …

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகத்தின் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவர், ஆவின்பாலகம் அமைத்தல் …

வெங்காயத்தை கிலோ ரூ.25 என்ற விலையில் விற்பனை செய்ய மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.

இது குறித்து மத்திய வேளாண் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கரீஃப் பருவப் பயிர் வரத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வெங்காய விலை அதிகரிப்பிலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்கும் வகையில், கிலோ ஒன்றுக்கு ரூ.25 என்ற மானிய விலையில் விற்பனை …

கடந்த சில நாட்களாக விலை குறைந்து விற்பனையான தங்கம், இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, 45,720 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இது நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, கடந்த சில நாட்களாக …

தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில் இத்திட்டத்தில் பயன்பெறுவதற்காக 31.10.2023 வரை 14 ஆயிரத்து 211 பயனாளிகள் பதிவு செய்துள்ளனர். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் பொதுச்சேவை மையங்களின் மூலம் பதிவு செய்துள்ளனர். 31.10.2023 வரை கோயம்புத்தூர் மாவட்டத்தில் 5510 பேரும், ஈரோடு மாவட்டத்தில் 1568 பேரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 2287 பேரும், …