திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கூத்தூர் பாலம் மீது சென்று கொண்டிருந்த மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலின்படி, தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து ஒன்று பழுதடைந்து நின்ற நிலையில் பஸ்சை மீட்டுக்கொண்டு மீட்பு வாகனம் ஒன்று பெரம்பலூரில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே கூத்தூர் மேம்பாலத்தில் வந்தபோது, அதே திசையில் வெல்ல மூட்டைகள் ஏற்றி வந்த லாரி […]

6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய ஜுலை 18-ம் நாளினை தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது. இவ்வறிவிப்பிற்கிணங்க 2022ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு நாள் விழா […]

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டத்தில் 2025-2026 ஆம் ஆண்டில் காரீப் (சொர்ணவாரி) பருவத்தில் நெல் I, 380 கிராமங்களில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. நெல் I பயிருக்கான விதைப்புக்காலம் மே முதல் ஜூன் ஆகும். ஆகையால் நெல் I (சொர்ணவாரி) பயிரிடும் விவசாயிகள் அனைவரும் வரும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் ஒரு ஏக்கருக்கு ரூ.726/- பிரீமியம் தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயனடையலாம் என மாவட்ட […]

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித்குமார் (28), இவர் நகை திருட்டு தொடர்பாக தனிப்படை போலீசாரால் விசாரிக்க அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். போலீசார் கண்மூடித் தனமாக தாக்கியதால் அஜித்குமார் உயிரிழந்ததாகவும் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, அஜித்குமார் உடலைப் பிரேதப் பரிசோதனை மேற்கொண்டதில் அவருடைய உடலில் […]

முருக பக்தர்கள் மாநாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் அரசியல் பேசியதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இந்து முன்னணி சார்பில், மதுரையில் கடந்த 22-ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடந்தது. அம்மாநாட்டில் அரசியல், மதம், பொது அமைதிக்கு எதிராகப் பேசக்கூடாது என்பன உள்ளிட்ட 52 நிபந்தனைகளை, மாநகர காவல் துறை விதித்திருந்தது. […]

நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துவந்த பரமக்குடி முதல் ராமநாதபுரம் வரையிலான நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1, 2025) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. பரமக்குடி நெடுஞ்சாலைத் திட்டத்தை அமைப்பதற்காக வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை , ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புதுமைத் திட்டம் , […]

திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “கடமை தவறிக் குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்றுத் தரும்! பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும்!” என்று பதிவிட்டுள்ளார். மேலும் உயிரிழந்த அஜித்தின் தாயார் மற்றும் ரிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ரொம்ப Sorry-மா. கடுமையான நடவடிக்கை எடுக்க சொல்லி இருக்கிறேன். […]

DGP சார், கைது செய்யப்பட்ட காவலர்கள் வழுக்கி விழுந்து கட்டுபோடப்பபடுவார்களா? அல்லது தப்பி ஓட முயற்சி என்று ஏதாவது நல்ல செய்தி வருமா?? என்று திமுக எம்.எல்.ஏ கேள்வி எழுப்பி உள்ளார். திருச்சி திமுக எம்.எல்.ஏ சிவகங்கை லாக் அப் மரணம் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். அவரின் பதிவில் “ DGP சார், கைது செய்யப்பட்ட காவலர்கள் வழுக்கி விழுந்து கட்டுபோடப்பபடுவார்களா? அல்லது தப்பி […]

அரசு ஊழியர்களுக்கான திருமண முன் பணத்தை ரூ.5 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது அரசு ஊழியர்களுக்கான திருமண முன் பணத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் அனைவருக்கும் இனி பொதுவாக ரூ.5 லட்சம் திருமண முன் பணமாக வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இதுவரை பெண் ஊழியர்களுக்கு ரூ.10,000, ஆண் ஊழியர்களுக்கு ரூ.6000 வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. […]