நாகை மாவட்டம் ஆழியூர் பகுதியைச் சேர்ந்தவர் குணா (37). இவர் திட்டச்சேரி காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தார். குணாவின் சகோதரிக்கு நாகையை சேர்ந்த ஒருவருடன் திருமணமாகி, இரண்டு குழந்தைகளுடன் அங்கு வசித்து வருகிறார். விடுமுறை கிடைக்கும்போதெல்லாம் காவலர் குணா தனது சகோதரியின் வீட்டுக்குச் சென்று ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தங்கி வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில், குணாவின் சகோதரியின் மூத்த மகளான பிளஸ் டூ படிக்கும் மாணவி, […]

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று கோபிச்செட்டிபாளையம் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது “ அதிமுக உடைந்துவிட கூடாது என்பதற்காக இரண்டு முறை கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை.. இபிஎஸ் பொதுச்செயலாளராக இருந்த போது அவர் எடுத்த முடிவுகளால் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. பொதுச்செயலாளராக தேர்தல் களத்தில் வெற்றியை காணாதவர் இபிஎஸ்.. எல்லோரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நோக்கில் தான் தேவர் ஜெயந்தி தினத்தில் அனைவருடனும் பேசினேன்.. தேவர் ஜெயந்திக்கு […]

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது “ எம்ஜிஆரின் பாராட்டுகளை பெற்றவன் நான்.. ஜெயலலிதா காட்டிய திசையில் கட்சிக்காக இரவு பகலாக உழைத்தேன்.. விசுவாசமாக இருந்ததால் தான் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பல்வேறு பொறுப்புகளை தந்தனர். அதிமுக உடைந்துவிட கூடாது என்பதற்காக இரண்டு முறை கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை.. இபிஎஸ் பொதுச்செயலாளராக இருந்த போது அவர் எடுத்த முடிவுகளால் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. பொதுச்செயலாளராக தேர்தல் […]

செங்கோட்டையன், ஓ.பி.எஸ் ஆகியோர் பூஜ்ஜியங்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 11-வது ஜெயந்தி மற்றும் குரு பூஜையை ஒட்டி நேற்று முன் தினம் ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் 3 பேரும் கூட்டாக தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.. இதை தொடர்ந்து மூன்று பேரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.. அப்போது அதிமுகவை ஒன்றிணைக்க மீண்டும் சபதம் எடுத்துள்ளதாகவும், திமுக ஆட்சியை […]

இந்தியாவில் சொந்தத் தொழில் தொடங்குவதற்கான ஆர்வம் பலருக்கும் இருந்தாலும், நிதிப் பற்றாக்குறை ஒரு தடையாக இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால், இந்தக் கருத்து தவறானது என்றும், வெறும் ரூ.50,000 போன்ற குறைந்த மூலதனத்தைக் கொண்டே வெற்றிகரமான மற்றும் அதிக லாபம் தரும் பல சிறு வணிகங்களைத் தொடங்க முடியும் என்றும் தொழில் ஆலோசகர்கள் கூறுகின்றனர். குறைந்த முதலீட்டில் தொடங்கி, எதிர்காலத்தில் பெரிய பிராண்டுகளாக வளரக்கூடிய சில வணிக வாய்ப்புகள் குறித்து இங்கே […]

கரூர் மாவட்டம் தென்னிலை பகுதியில் இயங்கி வரும் கல்குவாரி ஒன்றிலிருந்து எம். சான்ட் மணலை ஏற்றிக்கொண்டு ஒரு மினி லாரி கரூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில், லாரி கரூர் – தென்னிலை சாலையின் கடைவீதிப் பகுதி அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், லாரியில் பயணம் செய்த வடமாநிலத் தொழிலாளர்களான சிக்கந்தர், பிரபாகரன் […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

தமிழக கைத்தறி மற்றும் நெசவாளர் துறை அமைச்சர் ஆர். காந்தி, காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். புகழ்பெற்ற காஞ்சிபுரத்தில் இயங்கி வரும் 30-க்கும் மேற்பட்ட பட்டுப் புடவை உற்பத்தி கூட்டுறவு சங்கங்களில் முக்கியமான ஒன்றான முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தின் புனரமைக்கப்பட்ட விற்பனை நிலையத்தை அமைச்சர் ஆர். காந்தி திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் காந்தி, ”திமுக […]

சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் அருள்பிரகாஷ் (45). இவருக்கு திருமணமான நிலையில் ராம்நகர், சக்திநகரில் வசித்துக்கொண்டு, ஒரு ஷேர் மார்க்கெட்டிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் கருமலைக்கூடலைச் சேர்ந்த 25 வயதான கல்லூரிப் பட்டதாரிப் பெண் ஒருவர் ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். அந்த இளம்பெண் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்த அருள்பிரகாஷ், அப்பெண்ணை மிரட்டி, அலுவலகத்தின் மாடியில் உள்ள தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் […]

சமீபத்தில் கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்த நிலையில், நடிகர் அஜித் குமார் இதுகுறித்து முதல்முறையாகப் பேசியுள்ளார். கார் பந்தயப் போட்டிகளை முடித்துவிட்டு நாடு திரும்பிய அஜித், தனது பேட்டி ஒன்றில் இந்த சம்பவம் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். கரூர் கூட்ட நெரிசலை வைத்து தமிழ்நாட்டில் நிறைய விஷயங்கள் நடந்துவிட்டன. ஆனால், அந்த சம்பவத்திற்கு நடிகர் விஜய் மட்டும் பொறுப்பல்ல, நாமெல்லோருமே பொறுப்புதான் என்று […]