தமிழர்களின் பாரம்பரிய அடையாளமாக விளங்கும் பொங்கல் பண்டிகை, இயற்கைக்கு நன்றி செலுத்தும் மகத்தான திருநாளாக ஆண்டுதோறும் தை முதல் நாள் உற்சாகமாகவும் கோலாகலமாகௌம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு பொங்கல் திருநாள் ஜனவரி 15-ம் தேதியான இன்று கொண்டாப்படுகிறது.. இது, விவசாயம், சூரிய வழிபாடு மற்றும் குடும்ப ஒற்றுமையை ஒருங்கிணைக்கும் தனித்துவமான பண்டிகையாக உள்ளது. பொங்கல் முக்கியத்துவம் பொங்கல் என்பது “பொங்கிப் பெருகுதல்” என்ற அர்த்தம் கொண்டது. புது அரிசி, […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
சென்னையில் உள்ள காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் மாணவர்களிடையே உரையாற்றியபோது, வட மாநிலங்களில் உள்ள பெண்களின் நிலையை தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டு திமுக எம்.பி. தயாநிதி மாறன் செவ்வாய்க்கிழமை அன்று கருத்து தெரிவித்திருந்தார். இது ஒரு அரசியல் மற்றும் சமூக விவாதத்தைத் தூண்டியுள்ளது. அந்த நிகழ்வில் பேசிய மாறன், பல வட மாநிலங்களில் உள்ள பெண்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளைத் தொடர்வதற்கு பெரும்பாலும் ஊக்கப்படுத்தப்படுவதில்லை என்றும், மாறாக அவர்கள் வீட்டிலேயே […]
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசியர்கள் இயக்கம் சார்பில் சென்னையில் கடந்த டிசம்பர் 26-ம் தேதி காலவரையற்ற போராட்டம் தொடங்கப்பட்டது. கல்வித்துறை தலைமை அலுவலகம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகம், எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம், சேப்பாக்கம் எழிலகம், கடற்கரை சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என வெவ்வேறு இடங்களில் இடை நிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்! பொங்கல் திருநாளை முன்னிட்டு தங்களுக்கும். தங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மனிதனின் உழைப்பிற்கும், இயற்கையின் இசைவிற்கும் இடையேஉள்ள தெருங்கிய தொடர்பை இந்த சிறப்புவாய்ந்த பண்டிகை நமக்கு நினைவூட்டுகிறது. வேளாண்மை, கடினமாக உழைக்கும் நமது விவசாயிகள், கிராமப்புற வாழ்க்கைமுறை மற்றும் கண்ணியமான வேலை […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த […]
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள ஒரு தனியார் விடுதியில், தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த சாலா (33) எனும் இரு குழந்தைகளின் தாய் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம்பிள்ளையை சேர்ந்த பார்த்திபன் (35) என்பவருக்கும் சாலாவுக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்து வந்த நிலையில், சம்பவத்தன்று ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்று அங்குள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்துத் […]
தமிழக பாஜக-வின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குறித்து மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை (MNS) தலைவர் ராஜ் தாக்கரே வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்திற்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “அண்ணாமலை மும்பையில் கால் வைத்தால் அவரது கால்களை வெட்டுவேன்” என ராஜ் தாக்கரே பேசியிருப்பது அநாகரிகமான அரசியல் மட்டுமின்றி, ஜனநாயக விழுமியங்களுக்கே எதிரானது என சீமான் தனது அறிக்கையில் சாடியுள்ளார். மகாராஷ்டிர மண்ணின் […]
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், தொகுதிப் பங்கீடு தொடர்பான காய்நகர்த்தல்கள் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளன. அதிமுக மற்றும் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியில் நீடிக்கும் ஜி.கே. வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ், தங்களுக்கு 12 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என அதிரடியான கோரிக்கையை முன்வைத்துள்ளது. கடந்த கால தேர்தல்களில் பெற்ற வாக்கு வங்கியை அடிப்படையாக கொண்டு, இந்த எண்ணிக்கையில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளப்போவதில்லை என்பதில் […]
தமிழ்நாட்டில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு உயர்தர மருத்துவச் சிகிச்சைகள் எட்டாக்கனியாக இருந்துவிடக் கூடாது என்ற நோக்கில், ‘முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம்’ மிகச்சிறந்த பாதுகாப்புக் கவசமாக செயல்பட்டு வருகிறது. மாநில அரசின் இம்மாபெரும் திட்டத்தை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் ஒருங்கிணைத்து வழங்குகிறது. அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் நவீன மருத்துவ வசதிகளைக் கட்டணமில்லாமல் பெறுவதை இத்திட்டம் உறுதி செய்கிறது. பச்சிளங்குழந்தைகளுக்கான பராமரிப்பு சிகிச்சைகள் தொடங்கி, […]
‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்ற உன்னத தத்துவத்தைக் கொண்ட போகிப் பண்டிகை, சென்னையில் இன்று ஒரு சூழலியல் பேரழிவாக மாறியுள்ளது. பிளாஸ்டிக், டயர்கள் மற்றும் ரசாயனப் பொருட்களை எரிப்பதை தவிர்க்க வேண்டும் என பலகட்ட விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும், இன்று அதிகாலை முதல் சென்னை மாநகர் முழுவதும் கடும் புகை மூட்டத்தில் சிக்கி தவிக்கிறது. இந்த மோசமான சூழலால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் சுவாசப் […]

