தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய், அரசியலுக்கு வந்த பிறகு தமிழக அரசியல் களம் அவரைச் சுற்றியே சுழலத் தொடங்கியுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். அடுத்தடுத்து மாநாடுகள் மற்றும் மக்கள் சந்திப்புகளில் ஈடுபட்டு வந்த விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சமீபத்தில் கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த சோகத்தைத் தொடர்ந்து, சில நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டாலும், கட்சி மீதான மக்கள் செல்வாக்கு குறையவில்லை என்ற […]

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான ஆர். நல்லகண்ணு (வயது 100), மீண்டும் உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுமார் ஒன்றரை மாத சிகிச்சைக்குப் பிறகு கடந்த வாரம் தான் அவர் வீடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி வீட்டில் தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டதால், நல்லகண்ணு முதலில் சென்னையில் உள்ள […]

பிரபல சமையல் கலைஞர் மற்றும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் நடுவரான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா எழுப்பியுள்ள திருமண மற்றும் கர்ப்பம் தொடர்பான சர்ச்சைக்கு, நீதிமன்றத்தின் மூலமாக மட்டுமே தீர்வு காண முடியும் என்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். தான் சட்டத்தை மட்டுமே நம்புவதாகவும், நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் செய்துகொள்ள ஒப்புக்கொள்ள மாட்டேன் என்றும் மாதம்பட்டி ரங்கராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பல்வேறு பிரபலங்களின் சுபநிகழ்ச்சிகளில் […]

கனமழை எதிரொலியாக நெல்லையை தொடர்ந்து மேலும் 2 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், சில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை: தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து நாளை விலகக்கூடும். அதே சமயம், வடகிழக்கு […]

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இன்று முதல் 19-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இன்று முதல் 19-ம் தேதி வரை சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,710 சிறப்பு பேருந்துகள் என 4 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 14,268 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட நாட்களுக்கு 6,110 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 20,378 பேருந்துகள் இயக்கப்படும். பண்டிகை முடிந்து […]

தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில், சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து நாளை விலகக்கூடும். அதே சமயம், வடகிழக்கு பருவமழை, தமிழகம், புதுச்சேரி – காரைக்கால் பகுதிகள், கேரளா – மாஹே, தெற்கு உள் கர்நாடகம், ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திரப் […]

வடகிழக்குப் பருவமழை காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நியாய விலைக் கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை அக்டோபரிலேயே பெற்றுக் கொள்ளலாம் என்று உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தில் முன்னுரிமை மற்றும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் கோதுமையுடன் சர்க்கரை, மண்ணெண்ணெய் மற்றும் சிறப்புப் பொது […]