மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கும் முறையைத் தொடங்குவதற்கான பணிகளை மத்திய அரசுடன் இணைந்து முன்னெடுத்து வருவதாக தமிழக மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் தகவல். மேலும் தமிழகத்தில் விரைவில் ப்ரீபெய்டு மீட்டர் பொருத்தப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் வெளிவரும் தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 2026 முதல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் லிமிடெட் ( TNPDCL ) மாதாந்திரக் கட்டண முறையை அமல்படுத்த ஸ்மார்ட் […]

மாணவர்களை ஆர்டிஇ ஒதுக்கீட்டின்கீழ் பதிவு செய்வதற்காக 10 நாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி(ஆர்டிஇ) தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். மாநிலம் முழுவதுள்ள 8 ஆயிரத்துக்கும் மேலான தனியார் பள்ளிகளில் சுமார் 1 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம். தமிழகத்தில் […]

செங்கல்பட்டு மாவட்டம் சூளேரி காட்டுக்குப்பம் கடற்கரை பகுதியில் கடலில் மூழ்கி உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சூளேரி காட்டுக்குப்பம் கடற்கரை பகுதியில் கடந்த மாதம் 28ம் தேதி மாலை சென்னை பெரம்பூர் அகரம் பகுதியில் இருந்து வேன் ஒன்றில் 17 நபர்கள் சுற்றுலா வந்துள்ளனர். அவர்களில் பெரம்பூர், […]

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தெற்கு ரயில்வே சார்பில் மொத்தம் 108 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தெற்கு ரயில்வேயின் கூடுதல் பொது மேலாளர் பி.மகேஷ், சென்னை கோட்ட மேலாளர் சைலேந்திர சிங்; ரயில் நிலையங்களில் தூய்மைப்படுத்தும் பணிகள் மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டன. ஆகஸ்ட் 15-ம் தேதி வரை முதல்கட்டமாக நடைமேடைகள், ரயில் நிலையங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆக‌ஸ்ட் 16 முதல் செப்டம்பர் 16-ம் […]

தமிழகத்தில் இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரா இடையே நேற்று இரவு கரையை கடந்தது. இதன் தாக்கம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது […]

கடந்த சனிக்கிழமை கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது.. இந்த தகவல் அறிந்த உடன் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டது.. குறிப்பாக கரூர் எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி உடனடியாக மருத்துவமனைக்கு சென்று தேவையான உதவிகளை வழங்கினார்.. அதே போல் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் ஆகியோர் உடனடியாக கரூர் விரைந்தனர். மேலும் […]

ஈரோடு மாவட்டம் கோபி அருகே பெரியண்ண உடையாருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில், கால்நடைகளை மேய்க்கச் சென்ற ஒருவர், ஓரிடத்தில் மண் மேடு இருப்பதையும், நாய்கள் அங்கு துணியை இழுப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், அதன் அருகே சென்று பார்த்தபோது, புதைக்கப்பட்ட நிலையில் இருந்த ஆண் சடலத்தின் தலைப்பகுதி மட்டும் வெளியே தெரிந்துள்ளது. இதனால் பதறிப்போன அவர், போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, அங்கு வந்த போலீசார், மண்ணைத் தோண்டி […]