தூத்துக்குடியை சேர்ந்த 35 வயதுள்ள போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் அந்தரங்க தகவல்களை வைத்து, பணம் கேட்டு அவரது குடும்பத்துக்கு பெண் காவலர் ஒருவர் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டரின் மனைவி அளித்த புகாரில், “எனது கணவர் பணிபுரியும் போக்குவரத்து போலீஸ் பிரிவுக்கு, கடந்த பிப்ரவரி மாதம் கயத்தாறில் இருந்து ஒரு பெண் போலீஸ் மாற்றுப் பணியாக வந்தார். திருமணமாகி குழந்தைகள் உள்ள அந்தப் பெண் காவலர், […]

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ, பொதுக் கூட்டங்களுக்கான விதிமுறைகளை வகுக்க வரும் 6-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.. கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியது.. இதையடுத்து தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களுக்கான விதிமுறைகள் வகுக்கப்படும் […]

கோவை விமான நிலையம் அருகே நேற்றிரவு தனது ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவில் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. ஆண் நண்பரை தாக்கிவிட்டு மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய 3 இளைஞர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.. 3 பேரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.. இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் […]

தரும்புரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார்.. அப்போது பேசிய அவர் “ வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் தீய, சதிச்செயலை தேர்தல் ஆணையம் செய்கிறது.. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள இப்போது திருத்தம் ஏன்? பிகார் மாநிலத்தில் செய்ததைப் போன்று தமிழ்நாட்டிலும் செய்யத் துடிக்கின்றனர்.. 2026 தேர்தல் நெருங்கும் நிலையில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டியலை கையில் எடுத்துள்ளனர். பிகாரில் […]

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.. கோவை விமான நிலையத்தின் பின்புறம் நேற்றிரவு காரில் தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்த 21 வயதாகும் இந்த மாணவி கோவையில் உள்ள கல்லூரி ஒன்றி படித்து வருகிறார்.. இந்த நிலையில் நேற்றிரவு 11 மணியளவில் தனது ஆண் […]

தற்போதைய நவீன வாழ்க்கை முறையில் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் தவறான வாழ்க்கை முறை போன்ற காரணங்களால், இளம் வயதினரிடையே திடீர் மாரடைப்பு மற்றும் அதனால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போதும், நடனமாடும்போதும், நடைபயிற்சியின்போதும் திடீரென ஏற்படும் மாரடைப்பு சம்பவங்கள் அடிக்கடி செய்திகளில் வருகின்றன. எந்தவிதமான கெட்ட பழக்கங்களும் இல்லாத இளைஞர்கள் கூட மாரடைப்பால் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்த அபாயகரமான காலகட்டத்தில், இருதய அடைப்புகளை […]

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை ஒன்றிணைத்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கடந்த செப்டம்பர் மாதம் தெரிவித்தார்.. மேலும் 10 நாட்களுக்குள் இபிஎஸ் அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என்றும் அவர் காலக்கெடு விடுத்தார்… எனினும் செங்கோட்டையன் விதித்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் செங்கோட்டையன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தார்.. பசும்பொன் முத்துராமலிங்க […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துத் திரைத்துறையினர் மற்றும் அரசியல் பிரபலங்களிடையே தொடர்ந்து விவாதங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், நடிகர் விஜய்யுடன் ‘திருப்பாச்சி’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்த நடிகர் பெஞ்சமின், கோவையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், விஜய் தமிழகத்தின் முதல்வராக உருவெடுப்பார் என்பதில் தனக்குச் சிறிதும் சந்தேகம் இல்லை என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “விஜய் தொட்டதெல்லாம் வெற்றிதான். அவரது வாழ்க்கையில் தோல்வி என்பதே கிடையாது. அப்படிப்பட்ட […]