மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகரும் மோந்தா புயல். “வங்கக்கடலில் உருவான மோந்தா புயல், சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கு திசையில் 600 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் தொடர்ந்து நகர வாய்ப்பு உள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது அதிகபட்சமாக மணிக்கு 90-100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. […]

9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் புயல் உருவான நிலையில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது சென்னையிலிருந்து […]

நாகப்பட்டினம் மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள கொறுக்கையில் அமைந்திருக்கிறது அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில். இக்கோயிலின் மற்றொரு புராணப் பெயர் திருக்குறுக்கை. ஹோலிப் பண்டிகைக்குக் காரணமாக இருந்த ‘காம தகனம்’ (மன்மதனை எரித்தது) நிகழ்ந்த இடமாக இத்தலம் பார்க்கப்படுகிறது. இக்கோயிலைச் சுற்றியுள்ள பகுதியில் மணலுக்குப் பதில் தோண்ட, தோண்ட சாம்பல் கிடைப்பது இன்றும் பிரமிப்பை ஏற்படுத்தி வருகிறது. இத்தலத்தின் மூலவர் வீரட்டேஸ்வரர், தாயார் ஞானாம்பிகை, உற்சவர் யோகேஸ்வரர் ஆவர். மன்மதனை எரித்த […]

திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையாகும். தமிழ் மாதந்தோறும் வளர்பிறை, தேய்பிறையில் இரண்டு சஷ்டி திதிகள் வரும். அந்த வகையில், ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டியே, கந்த சஷ்டி என்றழைக்கப்படும். கந்த சஷ்டிக்கு முன் 7 நாள்கள் பக்தர்கள் விரதம் இருப்பார்கள். கந்த சஷ்டி விரதம் கடந்த அக். 22ஆம் […]

சுபமுகூர்த்த நாளான இன்று மாநிலம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் பத்திரங்கள் பதிவாக வாய்ப்புள்ளதால் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்ய உத்தரவு. மங்களகரமான தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்போது ஐப்பசி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த நாளான இன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக […]

தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 42.61 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆட்சியில் 2016-2017 முதல் 2020-2021 வரை 4 ஆண்டுகளில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட மொத்த நெல் 1 கோடியே 13 லட்சத்து 51,469 மெட்ரிக் டன். இதில் ஆண்டுக்கு சராசரியாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் 22 லட்சத்து 70,293 மெட்ரிக் டன் மட்டுமே. ஆனால், திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற 2021-ம் […]

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறும் நிலையில் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது சென்னையிலிருந்து கிழக்கு – தென்கிழக்கே 780 கி.மீ. தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தென்கிழக்கே 830 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது இன்று தென்மேற்கு […]

கோவையில் காவலர் பல பெண்களுடன் தகாத உறவில் இருப்பதாக அவரது மனைவி புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபம் பகுதியைச் சேர்ந்த சந்தியா தேவி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் காவலர் ஆறுமுகம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் ஆறுமுகம் பல பெண்களுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதை அறிந்த சந்தியா தேவி தனது கணவரிடம் இதுகுறித்து வினவியபோது, அவர் அவர்களை எல்லாம் […]