ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி மீதான போக்சோ வழக்கில், முந்தைய திமுக அரசை தொடர்புபடுத்தி அவதூறு பரப்பியதாக கூறி தவெக அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக தொழில்நுட்பப் பிரிவுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஜெம் கிரானைட் அதிபர் வீரமணிக்கு எதிராக, முந்தைய திமுக ஆட்சியில் முறையான […]

சென்னையை அடுத்த பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் கட்டுமான திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய தலைமைச் செயலக வளாகத்தைப் பட்டினப்பாக்கத்தில் அமைப்பது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் முடிவு செய்யப்பட்டது. சட்டப்பேரவையில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் விஜய், ரூ.1,200 கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்பதற்கான […]

உலகளவில் மனித உயிர்களை பறிக்கும் கொடிய நோய்களில் முதன்மையாக விளங்கும் புற்றுநோயை, அது உடலுக்குள் உருவாவதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு சாதாரண ரத்தப் பரிசோதனை மூலம் துல்லியமாக கண்டறிய முடியும் என்பதை ஆக்ஸ்போர்டு மற்றும் டொராண்டோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூட்டாக கண்டறிந்துள்ளனர். இந்த வரலாற்று சிறப்புமிக்க கண்டுபிடிப்பு, மருத்துவ உலகிலும் புற்றுநோய் சிகிச்சையிலும் மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக புற்றுநோய் முற்றிய நிலையிலேயே கண்டறியப்படுவதால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் […]

தமிழக பள்ளிக்கல்வி துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து இன்று முதல் வழக்கம்போல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவ, மாணவிகளுக்குக் காலாண்டுத் தேர்வுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அளிக்கப்பட்ட 9 நாள் காலாண்டு விடுமுறை நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து இன்று பள்ளிகள் திறக்கப்படுவதை தொடர்ந்து, 1 முதல் 8-ஆம் […]

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழகக் கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் வரும் அக்டோபர் 9-ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அரபிக்கடல் வரை நீளும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அதீத கனமழை […]

ஹோட்டல்கள் முதல் தெருவோர ஃபாஸ்ட் புட் கடைகள் வரை அசைவ உணவுகளுக்கு இணையாக தமிழர்களின் நாவை அடிமையாக்கியுள்ள ‘பனீர்’ உணவுகளுக்குப் பின்னால், மனித உயிரைப் பறிக்கும் அளவுக்குப் பேராபத்து மறைந்திருப்பது உணவுப் பாதுகாப்புத் துறையின் ஆய்வில் அம்பலமாகியுள்ளது. 100% தூய பாலில் இருந்து தயாரிக்கப்பட வேண்டிய பனீருக்கு பதிலாக, சந்தையில் மலிவாகக் கிடைக்கும் போலியான ‘அனலாக் பனீர்’ (Analogue Paneer) எனும் நச்சுத்தன்மை கொண்ட மாற்றுப் பொருள் உணவகங்களில் டன் […]

உடல் எடையை குறைக்க நினைத்தவுடன் பலரும் தேர்வு செய்யும் முதல் உடற்பயிற்சி நடைப்பயிற்சிதான். ஆனால், தினமும் 10,000 அடிகள் வரை மணிக்கணக்கில் நீண்ட தூரம் நடந்தால்தான் எடை குறையுமா அல்லது குறைந்த நேரம் வேகமாக நடந்தாலே பலன் கிடைக்குமா என்ற குழப்பம் பலருக்கும் உண்டு. இன்றைய பரபரப்பான பணிச் சூழலில் நடைப்பயிற்சிக்கென தனியாக மணிக்கணக்கில் நேரம் ஒதுக்குவது சாத்தியமற்றதாக உள்ள நிலையில், நாம் எவ்வளவு தூரம் நடக்கிறோம் என்பதை விடவும், […]

பருவமழை பற்றாக்குறை, வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி மற்றும் வெளிமாநில வரத்து குறைவு காரணமாக தமிழகத்தில் சன்ன ரக அரிசியின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த ஜனவரியில் ரூ.1,350 வரை விற்கப்பட்ட 26 கிலோ எடைகொண்ட சன்ன ரக அரிசி மூட்டை, தற்போது சில்லறை விற்பனையில் பிராண்டுகளுக்கு ஏற்ப ரூ.1,800 முதல் ரூ.2,250 வரை விற்கப்படுகிறது. கிலோவுக்கு ரூ.3 வரை மொத்த விலையில் கூடியுள்ளதால், பண்டிகை காலத்தில் குடும்ப பட்ஜெட் எகிறி […]

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கான அனல் பறக்கும் இடைத்தேர்தல் பிரசாரம் இன்று (அக். 4) மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 126-இன் கீழ் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. அதன்படி பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்தவோ, பங்கேற்கவோ முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி, வானொலி, […]

தமிழக அரசின் கட்டணமில்லா பேருந்துப் பயணத் திட்டமான ‘வெற்றிப் பயணம்’ திட்டத்திற்கு தடை விதிக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியார் பேருந்து உரிமையாளர் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. முந்தைய திமுக ஆட்சியில் நடைமுறையில் இருந்த ‘விடியல் பயணத் திட்டம்’, தவெக தலைமையிலான புதிய அரசு அமைந்த பிறகு மேலும் விரிவுபடுத்தப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் 12,600-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டு, காந்தி […]