தமிழகத்தில் 2-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வடகிழக்கு பருவ மழை தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளிலும் , புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் துவங்கியது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, […]

வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு தமிழக அரசு மாதம் தோறும் உதவித் தொகை எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம். தமிழக அரசு சார்பில் படித்து விட்டு வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம்‌ ஒன்றுக்கு ரூ.200 வழங்கபடுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-யும், 12-ம்‌ படித்தவர்களுக்கு ரூ.400-யும், பட்டதாரிகளுக்கு ரூ.600 தமிழக அரசால் வழங்கபடுகிறது. […]

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் நாளை உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்துகின்றார். சென்னை ராமச்சந்திரபுரா மருத்துவமனையில் முதுகு வலி காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டார். அவர் நீண்ட தூர பயணங்களை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதன் காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் சென்று முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மரியாதை செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது அவருக்கு பதில் , திமுக இளைஞர் அணி செயலாளரும் , […]

உயர்ரக செல்போன் வாங்க ஆசைப்பட்ட பள்ளி மாணவர்கள் கடத்தல் நாடகம் போட்டு தன் தந்தையை மிரட்டி பணத்தை பறிக்க முயன்றபோது போலீசாரிடம் வசமாக சிக்கிக் கொண்டனர். வேலூர் மாவட்டம் கொணவட்டத்தில் வசித்து வரும் வியாபாரி வசித்து வருகின்றார். இவருக்கு ஒரு மகன் உள்ளார். அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகின்றார். நேற்று இரவு வெளியே சென்ற மாணவன் திரும்ப வீட்டுக்கு வரவில்லை. இந்நிலையில் பெற்றோர் இங்கும் […]

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேசா முபீன் ஒரு மாதத்திற்கு முன்புதான் குடிவந்ததாக அவரை அடையாளம் காட்டி அப்துல் மஜீத் என்பவர் தெரிவித்துள்ளார். கோவை உக்கடம் பகுதியில் கடந்த 23ம் தேதி கேட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு மாருதி கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் ஜமேசா முபீன் என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பாக உக்கடம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினர் நடத்திய […]

கிராம சபை கூட்டங்கள் போல, தமிழகம் முழுவதும் நவம்பர் 1-ம் தேதி நகர சபை மற்றும் மாநகர சபை கூட்டங்கள் நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சி பகுதியில் நடைபெறும் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். அதில், நகராட்சிகளின் 2022-23-ம் ஆண்டின் வரவு செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை, மத்திய மாநில அரசு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், […]

சிறுபான்மையினர்‌ இன மாணவ, மாணவியர்களுக்கு மத்திய அரசின்‌ கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில்‌ மத்திய அரசால்‌ சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ளஇஸ்லாமியர்‌ , கிறித்துவர்‌, சீக்கியர்‌, புத்தமதத்தினர்‌, பார்சி மற்றும்‌ ஜெயின்‌ மதத்தைச்‌ சார்ந்த அரசு, அரசு உதவிபெறும்‌ மற்றும்‌ மத்திய அல்லது மாநில அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட தனியார்‌ கல்வி நிலையங்களில்‌ 2022-23 கல்வியாண்டில்‌ ஒன்று முதல்‌ 10 ஆம்‌வகுப்பு வரை பயிலும்‌ மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு கல்விஉதவித்தொகை பெறுவதற்கு […]

தமிழகத்தில் நவம்பர் 1- ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடதமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக; இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, […]

குரூப் 2, 2ஏ தேர்வின் முடிவுகளை விரைவில் வெளியிட நடவடிக்கை மேற்காெள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைத்தின் செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது; ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு 2, 2ஏ முதல் நிலை எழுத்துத் தேர்வு மே மாதம் 21-ம் தேதி நடைபெற்றது. இதற்கிடையே மகளிருக்கான இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகப் பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. இந்த வழக்குகளில் […]

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வடதமிழக கடலோர பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் […]