இன்றைய வேகமான வாழ்க்கைச் சூழலில், உடனடியாக தயாராகும் உணவுகளுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். குறிப்பாக, உருளைக்கிழங்கை கொண்டு செய்யப்படும் ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் போன்ற உணவுகள், சாதாரணக் கடைகள் முதல் ஆடம்பர உணவகங்கள் வரை எங்கும் எளிதில் கிடைக்கின்றன. இவை சுவையாக இருந்தாலும், இவற்றைத் தொடர்ந்து சாப்பிடுவது எதிர்காலத்தில் நாம் எதிர்பார்க்காத உடல்நலக் கேடுகளை ஏற்படுத்தும் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன. சமீபத்தில் ஹார்வர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் […]

வைட்டமின் டி அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் இதனால், சிறுநீரக செயலிழப்பு மற்றும் இதயக் கோளாறு ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர் எச்சரித்துள்ளார். சஃப்தர்ஜங்கைச் சேர்ந்த முன்னாள் எலும்பியல் மருத்துவர் ஒபைத் ரெஹ்மானின் கூற்றுப்படி, 29 வயதான ஒரு பெண்ணுக்கு கோலெகால்சிஃபெரால் நச்சுத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டது, இது வைட்டமின் டி அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் ஒரு ஆபத்தான நிலை, இது உயிருக்கு ஆபத்தானது. அதாவது ஆரோக்கியமாகத் தோன்றும் இந்த […]

பேருந்து நிலையங்கள், உணவகங்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள கழிப்பறைகள் அவசர தேவைகளுக்காக பலரால் பயன்படுத்தப்படுகிறது. தினமும் நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்தும் இந்த கழிப்பறைகள் ஓரிரு முறை மட்டுமே சுத்தம் செய்யப்படுகின்றன. சில சமயங்களில் சுத்தமாகத் தெரிந்தாலும், அங்கே கண்ணுக்கு தெரியாத எண்ணற்ற கிருமிகள் மறைந்திருந்து, நோய்த் தொற்றுக்கு வழிவகுப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, மூலம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமானப் பிரச்சனைகள் உள்ளவர்கள் அந்தக் கழிவறைகளைப் பயன்படுத்தும்போது, அதிக தீங்கு […]

இந்தியாவில் ஆங்காங்கே காணப்பட்ட உடல் பருமன் பிரச்சனை தற்போது ஒரு தேசிய சவாலாக உருவெடுத்துள்ளது. அண்மையில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறையால் வெளியிடப்பட்ட தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையின் புள்ளி விவரங்களும் இதை உறுதிப்படுத்துகின்றன. நாட்டின் மக்கள் தொகையில் 20%-க்கும் மேற்பட்டோர் உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர் என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. விரிவான தகவல்களின்படி, நாடு முழுவதும் 24 விழுக்காடு பெண்களும், 23 விழுக்காடு […]

கர்ப்ப காலத்தில் தலைவலி, காய்ச்சல் மற்றும் வலியை நிர்வகிக்க பொதுவாகப் பாதுகாப்பானது என கருதப்படும் பாரசிட்டமால் மாத்திரையை உட்கொள்வது, குழந்தையின் நரம்பியல் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதாக ஒரு புதிய ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் மவுண்ட் சினாய் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், 1 லட்சத்திற்கும் மேற்பட்டோரிடம் 46 ஆய்வுகளை மேற்கொண்டு இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வறிக்கையின்படி, கர்ப்பிணிகள் உட்கொள்ளும் பாரசிட்டமால் மருந்து நஞ்சுக் கொடி வழியாகக் […]