உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம். சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர் கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிரின் பொருளாதார சவால்களைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக அவர்களை வலுப்படுத்தவும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 2025- 2026 ஆம் நிதியாண்டிற்காக, வறுமை கோட்டிற்குக்கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் […]

பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த தொழிலாளர் எண்ணிக்கை விகிதம் 2025-ம் ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2-வது காலாண்டில் சிறிதளவு அதிகரித்து 55.1 சதவீதமாக உள்ளது. இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் சிறிது அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டில், பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 33.7 சதவீதமாக உள்ளது. இது […]

சில வேலைகள் நின்று கொண்டே செய்வது நல்லது, மற்றவை உட்கார்ந்திருக்கும் போது செய்வது நல்லது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, ஒரு வழக்கத்தைப் பின்பற்றாதது வீடு முழுவதும் எதிர்மறை சக்தியைப் பரப்பக்கூடும். இது நிதி இழப்புகளுக்கும் ஒரு நபரின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தில் சரிவுக்கும் வழிவகுக்கும். எனவே, எந்தெந்த வேலைகளை நின்று கொண்டே செய்யக்கூடாது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். இந்தத் தொகுப்பில், நிதி இழப்புகள் மற்றும் மன அழுத்தத்தைத் தவிர்க்க பெண்கள் […]

தொப்பை கொழுப்பு உள்ள பெண்களுக்கு கருவுறுதல் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. இடுப்பைச் சுற்றி கூடுதலாக ஒரு சென்டிமீட்டர் கொழுப்பு இருந்தால் மலட்டுத்தன்மை ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சி காட்டுகிறது. உடல் பருமன், அல்லது வயிற்று கொழுப்பு அதிகரிப்பது, இன்றைய காலகட்டத்தில் மிகவும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக மாறிவிட்டது. குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் அனைவரும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் பருமன் […]

சுய உதவிக் குழு உறுப்பினர்கள் சிறு தொழில் வணிகம் செய்வதற்கு ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 இலட்சம் மானியம் வழங்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது. விண்ணப்பதாரர் […]