டெல்லியின் சத்யா நிகேதன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மதியம் பல மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும் டெல்லி முதல்வர் ரேகா குப்தா உத்தரவிட்டுள்ளார். முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து, டெல்லி தெற்கு வளாக காவல் நிலையத்தில் ஆண்கள் தங்கும் விடுதியின் உரிமையாளர் ஹரிராம் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
கேரள மாநிலம் திருச்சூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சட்டவிரோதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு லாரி மீது அதிவேகமாக வந்த கார் மோதிய கோர விபத்தில், காரில் பயணித்த கல்லூரி மாணவர்கள் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், கேரளா எம்.பி.யும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், […]
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் துக்குகுடாவில் உள்ள ‘பிரைம் கேர்’ தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த இளம் செவிலியர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் 34 வயது மெக்கானிக்கை போலீசார் கைது செய்துள்ளனர். துக்குகுடாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஏழு மாதங்களாக செவிலியராக பணியாற்றி வந்தவர் யூகே ஷிரீஷா (21). மருத்துவமனை நிர்வாகம் அருகிலேயே ஏற்பாடு செய்திருந்த தங்குமிடத்தில் சக ஊழியர்களுடன் தங்கி பணிபுரிந்து […]
ஜம்மு காஷ்மீர் பட்காம் மாவட்டம் யூஸ்மார்க் உயரமான மலைப்பகுதியில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட அதிரடி பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதி யாசிர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். யூஸ்மார்க் மலைப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த துல்லியமான உளவுத்துறை தகவலை அடுத்து இந்திய ராணுவம், ஜம்மு காஷ்மீர் போலீஸ் மற்றும் சிஆர்பிஎப் படையினர் இணைந்து அப்பகுதியை சுற்றிவளைத்தனர். அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய […]
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், மாநில முதலமைச்சருமான விஜய்யின் அரசியல் நகர்வுகள் தற்போது டெல்லி வரை எதிரொலித்து, காங்கிரஸ் கூட்டணியை உலுக்கி வருகின்றன. 2029 நாடாளுமன்றத் தேர்தலை முதன்மை இலக்காக கொண்டு, உத்திரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் ஆகிய வடமாநிலங்களிலும் தவெகவின் கொடியை நட்ட விஜய் திட்டமிட்டு வருகிறார். அண்மையில் வெளியான தேசிய அளவிலான கருத்துக்கணிப்பில், பிரதமராக யாருக்கு ஆதரவு என்ற பட்டியலில் 9.2% வாக்குகள் பெற்று விஜய் […]
ஜார்ஜண்ட் மாநில உயர்கல்வி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சுதிவ்யா குமார் சோனு, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கிரிடீ மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் நள்ளிரவில் காலமானார். அமைச்சரின் மறைவுக்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) கட்சி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. “எங்களது அர்ப்பணிப்புமிக்க தோழரும், மாநில அமைச்சருமான சுதிவ்யா குமாரின் மறைவு ஜே.எம்.எம் குடும்பத்தையும், மாநில அரசையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது சேவை மற்றும் தியாகம் எப்போதும் நினைவுகூரப்படும்” […]
வீட்டிலிருந்தே வேலை செய்வது பலருக்குப் பிடித்தமான ஒன்றாக இருந்தாலும், தொடர்ந்து இரண்டு வாரங்கள் வீட்டில் இருந்தே வேலை பார்த்ததில் தனது மூளையே ‘செயலிழந்து நொந்துபோய்விட்டது’ என புனேவைச் சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. புனேவைச் சேர்ந்த மோஹினி சவான் என்ற பெண், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், தான் பணியாற்றும் நிறுவனத்தில் வழக்கமாக ‘ஹைப்ரிட்’ (Hybrid – சில நாட்கள் அலுவலகம், சில […]
இந்திய இரயில்வேயின் 60 நாட்கள் முன்பதிவு விதிமுறைகளின்படி, 2026 தீபாவளி பண்டிகைக்கான (நவம்பர் 8) இரயில் பயணச் சீட்டு முன்பதிவு இன்று (செப்டம்பர் 6 ஆம் தேதி) முதல் தொடங்குகிறது. தினமும் காலை 8:00 மணிக்கு IRCTC இணையதளம் மற்றும் இரயில் நிலைய முன்பதிவு மையங்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும். பண்டிகைக் காலத்தில் அதிக அளவில் பயணிகள் பயணிப்பார்கள் என்பதால், கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு […]
தற்கால அவசர மற்றும் இயந்திர வாழ்க்கையில், குறிப்பாக பெங்களூரு போன்ற பெருநகரங்களில் உள்ள தகவல் தொழில்நுட்பம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்களுக்கு பணிச்சுமையால் மன அழுத்தம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இந்த அழுத்தத்தில் இருந்து விடுபடவும், வார இறுதி விடுமுறை நாட்களை புத்துணர்ச்சியுடன் கழிக்கவும் பலரும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு மலையேற்றம் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் மலையேற்ற பிரியர்களின் விருப்ப பட்டியலில் முதலிடம் பிடித்து […]
ஆந்திர மாநிலம் விஜயநகரம் அருகே பெற்றோரின் எதிர்ப்பை மீறி 10 ஆண்டுகளாக காதலித்து கரம் பிடித்த மனைவியை, கூடுதல் பணம் கேட்டு மூக்கு மற்றும் வாயை அழுத்தி கணவனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனிமேர்கா கிராமத்தை சேர்ந்த புங்கா சந்தியா (23), அதே பகுதியைச் சேர்ந்த ராம் முத்யாலா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள […]

