இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த மாதம் நடந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற இராணுவ நடவடிக்கையின் போது, இந்திய விமானப்படை, S-400 வான் பாதுகாப்பு அமைப்புகள், மற்றும் தரையிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள் பயன்படுத்தி 6 பாகிஸ்தான் விமானங்களை சுட்டு வீழ்த்தி, 4 முக்கிய ரேடார் மையங்களை அழித்தது என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கையில், இந்த தாக்குதல்களில் இந்தியா ரஃபேல் போர் விமானங்கள், தரையிலிருந்து […]

உயர் கல்வி நிறுவனங்களில் ஒரே நேரத்தில் இரு படிப்புகளைப் பயில்வது தொடர்பாக திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை யுஜிசி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக யுஜிசி செயலாளர் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; உயர் கல்வி நிறுவனங்களில் ஒரே நேரத்தில் இரு படிப்புகளைப் பயில்வது தொடர்பாக யுஜிசி சார்பில் சமீபத்தில் நடைபெற்ற 589-வது கூட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை ஜூன் 5-ம் தேதி முதல் நடைமுறைக்கு […]

இந்திய நகரங்களில் உள்ள பெரும்பாலான கலாச்சாரங்கள் மற்றும் வழக்கங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால், கிராமங்களில் உள்ள வித்தியாசமான கலாச்சாரம் குறித்து பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பழங்குடியினர் மக்கள் திருமணம் செய்து கொள்ளாமல், லிவிங் ரிலேஷன் வாழும் முறை காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அப்படி, 70 ஆண்டுகளுக்கு மேல் லிவிங் முறையில் வாழ்ந்த ஒரு காதல் ஜோடிக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் […]

24 வயதுடைய வளர்ப்பு மகளை தந்தையே பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஜலால் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 24 வயது இளம்பெண்ணை அவரது வளர்ப்பு தந்தையே பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் தொல்லை தாங்க முடியாததால், ஒருகட்டத்தில் தன்னுடைய தாயிடம் நடந்த விவரங்களை கூறி அழுதுள்ளார். இதைக்கேட்டு […]

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தங்க நகைக்கடன் தொடர்பாக புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ரிசர்வ் வங்கி தற்போது ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கிகள் அல்லாத நிறுவனங்களில் வழங்கப்படும் கடன்கள் குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் அரசுத் துறைகளில் […]

நாட்டில் ஆதார் கார்டு என்பது முக்கிய ஆவணமாக உள்ளது. சிம் கார்டு வாங்குவது முதல் வங்கிக் கணக்கு தொடங்குவது வரை என அனைத்திற்குமே ஆதார் கார்டு அவசியம் தேவைப்படுகிறது. மேலும், இந்த ஆதார் கார்டை வைத்து கடனும் உங்களால் வாங்கிக் கொள்ள முடியும். அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். அதாவது, ஆதார் கார்டை வைத்து உங்களால் ரூ.10,000 வரை கடன் பெற முடியும். அதுவும், ஒரு சில […]

பாரதிய ஜனதா கட்சியின் அடுத்த தேசியத் தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்காக 3 தலைவர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர். பாஜகவின் தேசிய தலைவராக ஜே.பி.நட்டா பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் 2023ஆம் ஆண்டே முடிந்துவிட்டது. ஆனால் 2024 மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு நீட்டிக்கப்பட்டது. பாஜக அமைப்புத் தேர்தல்கள் பெரும்பாலான மாநிலங்களில் நிறைவடைந்த நிலையில், தற்போது புதிய தேசியத் […]

இந்தியாவில் வங்கி லாக்கர் வசதிகள் ரிசர்வ் வங்கியின் (RBI) வழிகாட்டுதல்கள் மற்றும் தனிப்பட்ட வங்கிகளின் விதிகளின் கீழ் செயல்படுகின்றன. வாடிக்கையாளரின் லாக்கரில் சேமிக்கப்பட்ட உள்ளடக்கங்களின் பதிவுகளை வைத்திருக்க அனுமதியில்லை. மேலும், லாக்கருக்குள் என்ன இருக்கிறது என்பது குறித்து விசாரிக்கவும், வங்கிகளுக்கு உரிமை இல்லை. வங்கியின் அலட்சியம் அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் இழப்பு ஏற்பட்டால், வாடிக்கையாளருக்கு வங்கி இழப்பீடு வழங்க வேண்டும். ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, வங்கியின் அலட்சியத்தால் இழப்பு […]

மத்திய அரசின் உதவித்தொகை தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.1,000 முதல் ரூ.25,000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. 1ஆம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு 2025-26 ஆம் நிதியாண்டில் கல்வி உதவித் தொகை பெற மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பது […]

நாட்டில் தற்போது கொரோனா பெருந்தொற்று கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், கர்ப்பிணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியாவிலேயே, கேரள மாநிலத்தில் தான் கொரோனா பெருந்தொற்று வேகமாக அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அங்கு நேற்று முன்தினம் நிலவரப்படி, 24 மணி நேரத்திற்குள் 192 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில், இரண்டு பேர் உயிரிழந்திருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கேரளாவில் கொரோனா பாதித்து […]