இளைஞர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், உள்ளடக்கங்களை வயது அடிப்படையில் வகைப்படுத்துமாறு ஓடிடி (OTT) தளங்களுக்கு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த தளங்களில் ஆபாச பதிவுகளை தடுக்கவேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள், பொதுமக்களிடமிருந்து கிடைத்த குறைகளின் அடிப்படையில் இந்த அறிவுறுத்தல் …