உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீச முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என அடையாளம் காணப்பட்ட நபரை நீதிமன்ற ஊழியர்கள் உடனடியாக கைது செய்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். சம்பவத்திற்கு முன்பு, “சனாதனின் அவமானத்தை பொறுத்துக்கொள்ள முடியாது” என்று கிஷோர் கத்தியதாக கூறப்படுகிறது.. எனினும் பி.ஆர். கவாய் முழுவதும் அமைதியாக இருந்தார். பின்னர், இதுபோன்ற சம்பவங்கள் தன்னைப் […]

மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணிகள் இன்றும் தொடர்ந்து வருகின்றன.. பலரை இன்னும் காணவில்லை என்று கூறப்படுகிறது.. மேலும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பேரிடரால் துண்டிக்கப்பட்ட மலைப்பகுதிகளில் சிக்கித் தவிக்கின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவு மற்றொரு உடல் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, எண்ணிக்கை அதிகரித்ததை வடக்கு வங்காள மேம்பாட்டு அமைச்சர் உதயன் குஹா உறுதிப்படுத்தினார். மேலும் “நிலைமை […]

டெல்லியில், மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவருக்குக் குளிர்பானத்தில் ரகசியமாக போதைப்பொருளைக் கலந்து கொடுத்து, அவரைப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் ஜிந்த் பகுதியைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர், தற்போது டெல்லியில் உள்ள விடுதியில் தங்கிப் படித்து வருகிறார். இந்நிலையில், அதே ஜிந்த் பகுதியைச் சேர்ந்தவரும், டெல்லியில் போட்டித் தேர்வுக்குப் பயிற்சி பெற்று வருபவருமான ஒரு இளைஞர், அந்த மாணவிக்கு நன்கு […]

துர்கா பூஜை சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது ஏற்பட்ட வன்முறை மோதல்களைத் தொடர்ந்து ஒடிசாவின் கட்டாக் நகரில் பதற்றம் நிலவுகிறது. ஒழுங்கை மீட்டெடுக்க மாநில அரசு ஊரடங்கு உத்தரவு மற்றும் இணைய சேவை இடைநிறுத்தம் உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 36 மணி நேர ஊரடங்கு உத்தரவு கட்டாக்கில் அதிகரித்து வரும் வன்முறையைக் கட்டுப்படுத்த ஒடிசா அரசு ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் கட்டாக்கில் உள்ள 13 காவல் நிலைய எல்லைகளில் […]

வாகன ஓட்டிகளின் பாதுகாப்பையும், போக்குவரத்துத் துறையின் டிஜிட்டல் சேவைகளையும் உறுதி செய்யும் விதமாக, ஓட்டுநர் உரிமம் (DL) மற்றும் வாகன உரிமையாளர் சான்றிதழில் (RC) சரியான தொலைபேசி எண்ணைப் புதுப்பிக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மொபைல் எண் இணைப்பின் அவசியம் என்ன..? போக்குவரத்துத் துறை அதன் முக்கியமான அறிவிப்புகள் அனைத்தையும் குறுஞ்செய்தி (SMS) மூலமாகவே அனுப்புகிறது. குறிப்பாக, இன்சூரன்ஸ் முடிவு […]

கர்நாடக மாநிலம் பெங்களூரு எல்லையில் வசித்து வந்த யசோதா என்ற திருமணமான பெண், தனது கள்ளக்காதலன் மற்றொரு தோழியுடன் உறவு வைத்திருந்ததை பார்த்து ஆத்திரமடைந்து, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யசோதாவுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆடிட்டரான விஸ்வநாத் என்பவருடன் கடந்த 9 ஆண்டுகளாக கள்ளத் தொடர்பில் இருந்துள்ளார். இந்த உறவு தொடர்ந்த நிலையில், […]

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் காணக்காரி பகுதியைச் சேர்ந்தவர் ஷாம் ஜார்ஜ் (59). இவருக்கும் இவரது மனைவி ஜெசி சாம் (49) என்பவருக்கும் இடையே நீண்ட காலமாக தகராறு நிலவி வந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு ஜெசியின் சடலம் பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஷாம் ஜார்ஜை போலீசார் கைது செய்து விசாரித்ததில், மனைவியைக் கொலை செய்து உடலை வீசிய உண்மையை அவர் ஒப்புக்கொண்டார். விசாரணையில், […]