ரயில் டிக்கெட் முன்பதிவுகளின் போது பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே தயாராகி வருகிறது. நேற்று ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த மாற்றங்களில் தரவரிசையில் முன்னேற்றங்கள், புதிய பயணிகள் முன்பதிவு முறை (PRS) மற்றும் தட்கல் முன்பதிவுகளுக்கான நெறிப்படுத்தப்பட்ட அங்கீகாரம் ஆகியவை அடங்கும். மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த வரவிருக்கும் சீர்திருத்தங்களை மதிப்பாய்வு செய்துள்ளார். “டிக்கெட் முறை ஸ்மார்ட்டாகவும், வெளிப்படையாகவும், […]

இன்றுடன் ஜூன் மாதம் முடிவடைகிறது. நாளை (ஜூலை 1 ஆம் தேதி) முதல், இந்தியா முழுவதும் பல முக்கியமான விதி மாற்றங்கள் அமலுக்கு வரும், இது மக்கள் அத்தியாவசியப் பொருட்களைச் செலவிடும் முறையையும் நிர்வகிக்கும் முறையையும் நேரடியாகப் பாதிக்கும். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ரயில் டிக்கெட் விலை உயர்வுகள் முதல் ஏடிஎம் பணம் எடுக்கும் கட்டணங்கள் வரை இந்த மாற்றங்கள் உள்ளன. என்ன மாறுகிறது, அது உங்கள் நிதி சூழலை எவ்வாறு […]

ஜூலை மாதத்தில் பொது விடுமுறை நாட்கள், ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் இரண்டு சனிக்கிழமைகள் உட்பட பத்து நாட்களுக்கு மேல் வங்கிகள் மூடப்படும். 2025-26 நிதியாண்டிற்கான இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பிராந்தியங்களுக்கும் வங்கி விடுமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி விடுமுறை நாட்காட்டியின்படி, ஜூலை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் உட்பட 13 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும். மேலும் அவை பிராந்தியத்திற்கு பிராந்தியம் மாறுபடலாம். […]

உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில், இன்று அதிகாலை ஏற்பட்ட மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவில், இரண்டு கட்டுமானத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். சம்பவ நேரத்தில் மொத்தம் 29 தொழிலாளர்கள் முகாமில் இருந்தனர். இதில் 20 பேர் மீட்கப்பட்டதாகவும், 7 பேர் காணாமற்போனதாகவும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. பின்னர், காணாமல் போனவர்களில் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போன 7 தொழிலாளர்களும் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என போலீஸார் தெரிவித்துள்ளனர். அவர்களை […]

இந்தியாவில் பல முக்கிய பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்ட ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் இந்தியக் கிளையின் முன்னாள் தலைவரான சாகிப் நாச்சன், டெல்லி திகார் மத்திய சிறையில் உயிரிழந்துள்ளார். சிறையில் இருந்தபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட அவருக்கு, மருத்துவ பரிசோதனையில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. உடனடியாக சாஃப்தார்ஜங் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. பயங்கரவாத பாதையில் சென்ற பிசினஸ்மேன்: மகாராஷ்டிரா […]

பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர், ஒடிஸாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலமாக நடைபெற்றுவரும் நிலையில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பிரதான கோயிலில் இருந்து 2.6 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீகுந்திச்சா கோயிலுக்கு ரதங்கள் இழுத்துச் செல்லப்பட்டு, அங்கு 9 நாட்கள் வழிபாட்டுக்குப் […]

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில், ஹோட்டல் தளத்தின் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் மேகவெடிப்பால், திடீரென கனமழை கொட்டித்தீர்த்தது. இதில் மேல் தளம் சேதமடைந்ததில் ஒன்பது தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர் . இந்த சம்பவம் நள்ளிரவு 2 மணியளவில் நடந்துள்ளது, காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. செய்தி நிறுவனமான PTI படி, தெஹ்ஸில் பர்கோட்டில் உள்ள பாலிகாட்-சிலாய் […]

இந்திய ரயில்வேயில் காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வெளியாகியுள்ளது. டெக்னீசியன் கிரேட் 3 , டெக்னீசியன் கிரேடு 1 (சிக்னல்), ஆகிய இரண்டு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டெக்னீசியன் கிரேடு மூன்று பிரிவில் 6000 வேலை வாய்ப்புகள் உள்ளன. டெக்னீசியன் கிரேடு 1 (சிக்னல்) பிரிவுக்கு 180 இடங்கள் உள்ளன. மொத்தம் 6180 இடங்கள் காலியிடங்களாக உள்ளன. வயதுவரம்பு 18 வயதில் இருந்து 30 வயதிற்குட்பட்டு இருக்க வேண்டும். எஸ்சி மற்றும் […]

டிஜிட்டல் தளங்கள் மூலம் குற்றச் செயல்கள் எவ்வளவு அமைதியாகப் பரவுகிறது என்பதை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. ரூ.2000-க்காக தம்பதி, ஒரு தம்பதி தங்கள் தனிப்பட்ட உடலுறவுத் தருணங்களை லைவ் வீடியோவில் ஒளிபரப்பினர். இந்த சம்பவம் அனைத்தும் அவர்கள் வீடிலிருந்தே நடைபெற்று வந்தது. இன்றைய காலக்கட்டத்தில், சாதாரணமாகத் தெரியும் பலரும் – வேகமாகப் பணம் சம்பாதிக்க வேண்டிய ஆசையில், ஆபத்தான வழிகளில் பயணிக்கத் தொடங்குகிறார்கள். இந்த வழிகள் ஒருமுறை […]