79வது சுதந்திர தினத்தன்று, பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 11வது ஆண்டாக செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்வை வரலாற்று சிறப்புமிக்கதாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த முறை பிரதமர் மோடியின் உரை, குறிப்பாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்திய ஆயுதப் படைகளின் வீரம் மற்றும் தியாகத்திற்கு அர்ப்பணிக்கப்படும். இந்தியாவின் உலகளாவிய கண்ணோட்டம், சர்வதேச கூட்டாண்மைகள் மற்றும் நாட்டின் பாதுகாப்பில் ஆயுதப்படைகளின் முக்கிய […]

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்லூரிக்கு செல்லத் திட்டமிட்டிருந்த 18 வயது மாணவி, அவரது தந்தை மற்றும் மாமா ஆகியோரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தை சேர்ந்த 18 வயது மாணவி மாணவி சந்த்ரிகா சௌதரி, 23 வயது இளைஞரான ஹரேஷை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், மாணவி நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில், அதில் வெற்றி பெற்று மருத்துவக் […]

இந்த வாரத்தில் வங்கியில் செய்ய வேண்டிய வேலைகள் இருந்தால், கவனமாக இருங்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிக்கு செல்லும் முன், எந்த நாட்களில் மற்றும் எந்த மாநிலங்களில் விடுமுறை உள்ளது என்பதை சரிபார்த்து செல்வது முக்கியம். இந்த ஆகஸ்ட் வாரம் விடுமுறைகளால் நிரம்பியுள்ளது . அதிலும் சில இடங்களில் மூன்று நாள் தொடர் வங்கி விடுமுறை இருக்கிறது. எனவே உங்கள் வங்கி […]

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 2,800 நாய்களைக் கொன்றதாக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். கர்நாடக எம்.எல்.சி எஸ்.எல். போஜேகவுடா இன்று சட்டமன்றத்தில் பேசிய போது , “நாய்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றத்தை நாடும் முதல் மாநிலமாக கர்நாடகா இருக்கட்டும்.. உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும்… ” என்று கோரினார். மேலும் “விலங்குகள் மீது எங்களுக்கும் அக்கறை உண்டு, ஆனால் […]

கர்நாடகாவின் துமகுரு மாவட்டம், பெல்லாவி கிராமத்தில் இடம்பெற்ற கொடூரக் கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 42 வயதான லட்சுமி தேவி என்பவர், தனது சொந்த மருமகனாலேயே கொலை செய்யப்பட்டு, உடல் பல துண்டுகளாக வெட்டி 19 பைகளில் அடைத்து, வெவ்வேறு இடங்களில் தூக்கி வீசப்பட்டிருப்பது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆகஸ்ட் 4 அன்று, மகளை பார்க்க வீட்டை விட்டு சென்ற லட்சுமி தேவி வீடு திரும்பவில்லை. இதையடுத்து, […]

நாடு முழுவதும் சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்து தண்டனை வாங்கிக் கொடுத்தாலும், குற்றங்கள் குறைந்தபாடில்லை. தொடர்ந்து, இதுபோன்ற சம்பவங்கள் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த சூழலில் தான், உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண் ஒருவரை பைக்கில் சில நபர்கள் துரத்திச் சென்று வயல்வெளியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

கேரளாவில் இளம்பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, காதலன் தன்னை ஏமாற்றி உல்லாசமாக இருந்ததாக கடிதம் எழுதி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலம் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண், அங்கமாலி அருகே உள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில், இளம்பெண்ணுக்கும், கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றி வந்த ரமீஸ் என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த […]