யுனைட்டெட் பேங்க் ஆப் இந்தியாவின் பெங்களூரு கண்டோன்மென்ட் கிளையில் துபாயிலிருந்து மென்பொருள் கொள்முதலுக்காக கடன் பெற்ற நிறுவனம், இந்த நிதியை வேறு பணிகளுக்கு மாற்றியதோடு, பாதுகாப்புத் தொகையையும் செலுத்தாதது கண்டறியப்பட்டது. இதனால் வாராக்கடன் மூலம் வங்கிக்கு 18 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இது தொடர்பான வழக்கை சிபிஐ பதிவு செய்து விசாரித்தது. பெங்களூருவில் உள்ள சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் 21-வது நகர சிவில் […]

இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தான ’கோல்ட் அவுட்’ (Cold Out)சிரப் உயிரைக் கொல்லும் அளவிற்கு ஆபத்தானவை என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. `கோல்ட் அவுட்’ என்று முத்திரை பதிக்கப்பட்ட சிரப், தமிழ்நாட்டைச் சார்ந்த ஃபோர்ட்ஸ் லேபரட்டரீஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த டாபிலைஃப் பார்மா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. இந்த சிரப்பின் மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மாதிரியில், ஏற்றுக்கொள்ள […]

ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலியல் பலாத்காரம் மற்றும் இதர பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களை அரசு வேலைகளில் இருந்து தடை செய்ய ராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது என்று முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்வீட்டில், பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்களை ஈடுபடும் நபர்களின் விவரம் […]

கணவனின் தோல் கருப்பாக இருப்பது குறித்த மனைவியின் இனவெறிக் கருத்துகள் கொடுமையானது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கர்நாடகாவை சேர்ந்த நபர் ஒருவர் விவாகரத்து கேட்டு 2012ம் ஆண்டு பெங்களூரு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்தமனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அந்த மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனுவில், தான் கருப்பாக இருப்பதை காரணம் காட்டி, தனது மனைவி தொடர்ந்து அவமானப்படுத்தி வந்ததாகவும், வரதட்சணை […]

பிரபல மலையாள இயக்குனர் சித்திக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் பிரபல இயக்குனர் சித்திக் வயது 65. 1989ஆம் ஆண்டு வெளியான ‘ராமோஜிராவ் ஸ்பீக்கிங்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து காட்ஃபாதர், வியட்நாம் காலனி, ஹிட்லர் உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். விஜய், சூர்யா நடிப்பில் காமெடிக்கு பேர்போன படம் என அறியப்படும் “ஃப்ரெண்ட்ஸ்” […]

சத்தீஸ்கர் மாநில அரசு தற்போது உச்சநீதிமன்ற உத்தரவின் படி ஒரு திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில், பூபேஷ் பாகல் தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. சென்ற வருடம் சதீஷ்கர் மாநில அரசால் தொடங்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வரும், பொது சேவைகள், பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான 58 சதவீத இட ஒதுக்கீடு முறையை அறிவித்திருக்கிறது. ஆனாலும் கடந்த 1994 ஆம் வருடம் உச்சநீதிமன்ற வழங்கிய தீர்ப்பின்படி, 50 சதவீத இட […]

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ராகுல் காந்தி ஒற்றுமை பயணம் என்று சொல்லி, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில், நடை பயணத்தை மேற்கொண்டார். அந்த நடை பயணம் சமீபத்தில் முடிவுற்ற நிலையில், தற்போது மீண்டும் ராகுல் காந்தியின் 2வது ஒற்றுமை பயணம் விரைவில் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக, கன்னியாகுமரியில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 7ம் தேதி ஆரம்பமான ராகுல் காந்தியின் முதல் ஒற்றுமை நடைப்பயணம், நூறு […]

சென்ற மே மாதம் 4ம் தேதி முதல் மணிப்பூர் மாநிலத்தில், இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, அங்கு கலவரம் வெடித்தது. இதனால் இணைய சேவை முற்றிலுமாக, முடக்கி வைக்கப்பட்டது. அதேபோல, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அங்கு மீண்டும் அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. ஆகவே பள்ளிகளை திறக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கு முன்பாக, பலமுறை பள்ளிகள் திறப்பதற்கான […]

தற்போது அரசு திட்டங்கள் எதுவாக இருந்தாலும், அதற்கு ஆதார் அட்டை கட்டாயம் என்று ஆகிவிட்ட நிலையில், அனைவரும் தங்களுடைய ஆதார் அட்டையை அவ்வப்போது புதுப்பித்து வருகிறார்கள். தற்போது உள்ள சூழ்நிலையில், வங்கி கணக்கு திறப்பது முதல், குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பது வரையில் என அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதார் எண் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான், ஒடிசா மாநில அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆதார் கட்டாயம் இல்லை […]

ராகுல் காந்திக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட துக்ளக் லேனில் உள்ள பங்களாவை மீண்டும் ஒதுக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது கர்நாடக மாநிலம் கோலாரில் மோடி பெயரை முன்வைத்து பேசிய பேச்சுக்காக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால், ராகுல் காந்தியின் எம்பி பதவியும் பறிக்கப்பட்டது. அவருக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களா திரும்பப் பெறப்பட்டது. […]