மகாராஷ்டிராவில் ஒரு பள்ளி வகுப்பறையில், ஒரு மாணவர் தனது வகுப்பு தோழரின் கழுத்தை அறுத்த சம்பவம், குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் வன்முறை குறித்து தீவிர கவலைகளை எழுப்பியுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள், குழந்தைகள் தங்களின் கோபம் மற்றும் ஏமாற்றத்தை கையாள முடியாமல் போகும் நிலையை காட்டுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நிபுணர்கள் இதுகுறித்து பேசிய போது “ இந்த வகை வன்முறை நடத்தை என்பது பிறவியிலேயே குற்ற மனப்பான்மை கொண்டதன் […]

ஊழியர்களின் ‘வேலை-வாழ்க்கை சமநிலை’ (Work-Life Balance) என்ற கருத்தைப் பின்பற்றி, ஜப்பான், ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற பல நாடுகளில் தற்போது வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை மற்றும் 3 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கும் முறை நடைமுறையில் உள்ளது. இதே ஃபார்முலாவை இந்தியாவிலும் அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அம்சம் சமீபத்தில் அமலுக்குக் கொண்டு வரப்பட்ட புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளதாக மத்திய […]

வட இந்தியாவில் நிலவும் கடுமையான பனிமூட்டம் மீண்டும் ஒரு கோர விபத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி-ஆக்ரா விரைவுச் சாலையில் செவ்வாய்க்கிழமையான இன்று அதிகாலை ஏற்பட்ட தொடர் விபத்தில், 7 பேருந்துகள் மற்றும் 3 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி தீப்பிடித்ததில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் அதிகாலை 4 மணியளவில், மதுராவில் உள்ள பல்தேவ் காவல் நிலையப் பகுதிக்கு […]

பனிமூட்டத்தின்போது பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடவடிக்கை. தேசிய நெடுஞ்சாலைகளில் குளிர்காலப் பனிமூட்டத்தால் ஏற்படும் குறைந்த பார்வைத்திறனைக் கையாள, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், பொறியியல் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் பாதுகாப்பை மேம்படுத்தியுள்ளது.பொறியியல் நடவடிக்கைகள் மூலம் சேதமடைந்த சாலை அடையாளங்கள், ஸ்டட்டுகள் மற்றும் பிரதிபலிப்பான்களை மீண்டும் நிறுவுதல், தடுப்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டுதல், கட்டுமானப் பகுதிகளில் சூரிய ஒளியில் இயங்கும் எச்சரிக்கை விளக்குகள் அமைத்தல் போன்ற […]

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த எதிர்பாராத குடும்ப நாடகம், அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2003-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட ராம் சிங் (50) மற்றும் உமா தேவி (45) தம்பதியினரின் வாழ்க்கை, 7 ஆண்டுகளாக தொடர்ந்த கள்ளக்காதல் ரகசியத்தால் தலைகீழாக மாறியது. இந்தத் தம்பதிக்கு 19 வயது மகள் பிரியா மற்றும் 16 வயது மகன் அர்ஜுன் இருக்கும் நிலையில், இந்தச் சம்பவம் […]

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் சமீபத்திய விளக்கத்திற்குப் பிறகு, இந்தியாவில் நான்கு நாள் வேலை வாரம் என்ற யோசனை மீண்டும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியர்கள் வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்து, முழு வாரத்திற்கான ஊதியத்தைப் பெற முடியுமா? என்பதே பல தொழிலாளர்களின் கேள்வியாக உள்ளது.. சுருக்கமாகச் சொன்னால், ஆம், அது சாத்தியம். ஆனால், புதிய தொழிலாளர் சட்டங்களால் வகுக்கப்பட்ட தெளிவான விதிகளின் கீழ் மட்டுமே இது […]

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த சீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்குத் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. இவருடைய கணவர் பால் வியாபாரம் செய்து வந்தார். தினமும் அதிகாலை 5 மணிக்கு வியாபாரத்திற்குச் சென்றால், இரவு 10 மணிக்கே திரும்புவார். இந்தக் கால அவகாசத்தில், சீதாவுக்கு எதிர் வீட்டில் வசித்த மோகித் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் நட்பாகத் தொடங்கிய இவர்களது பழக்கம், நாளடைவில் தகாத உறவாக மாறியது. இருவரும் […]

கனவுகளுடன் வாழ்ந்த 17 வயது சிறுமியின் வாழ்க்கை, இன்ஸ்டாகிராம் புகழ் மற்றும் ஒரு போதைக்கு அடிமையான காதலனால் நொடியில் நாசமான கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் பிரபலமாக வலம் வந்த ஆஷா பட்டேல், தனது அந்தரங்க வீடியோக்கள் இணையத்தில் வைரலானதால் ஏற்பட்ட தாங்க முடியாத வேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவத்திற்கு காரணமான 4 மருத்துவ மாணவர்களுக்கு மும்பை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. நடுத்தர […]

கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக 40 முதல் 45 வயதிற்குட்பட்டவர்கள் மத்தியிலேயே திடீர் மரணங்கள் அதிகமாக நிகழ்கின்றன என்ற அதிர்ச்சித் தகவலை சமீபத்திய ஓர் ஆய்வு தரவுகளுடன் உறுதிப்படுத்தியுள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நோயறிதல் மற்றும் தடயவியல் துறைகள் இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வின் விரிவான முடிவுகள், இந்திய மருத்துவ ஆய்வுகள் இதழில் (ICMR) வெளியாகியுள்ளது. மே 2023 முதல் ஏப்ரல் 2024 வரை மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், மொத்தம் […]